இந்திய போர் விமானிகளுக்கு இங்கிலாந்தில் பயிற்சிநாக்பூர்:2012ம் ஆண்டுக்குள் 80 மிக் ரக விமானங்கள் இந்திய விமானப் படையில் இருந்து நீக்கப்பட்டுவிடும் என விமானப் படைத் தளபதி ஏர் மார்ஷெல் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.மேலும் இந்திய விமானப் படையின் புதிய விமானிகளுக்கு இங்கிலாந்தில் பயிற்சி தரப்படும் என்றார்.ரஷ்யாவைச் சேர்ந்த மிக் ரக விமானங்கள் தான் இந்திய விமானப் படையின் முக்கிய போர் விமானங்களாக இருந்து வருகின்றன. ஆனால், காலம் கடந்த இந்த விமானங்கள் தொடர்ந்து விபத்துள்ளாகி வருவதால் பெருமளவில் உயிர், பண நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.இதையடுத்து மிகப் பழைய மிக் ரக விமானங்களை புதுப்பிக்கும் வேலையைக் கைவிட்டுவிட்டு, அவற்றை படையில் இருந்து நீக்கிவிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஏர் மார்ஷெல் தெரிவித்தார்.நாக்பூர் விமானப் படைத் தளத்தில் நிருபர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி,இந்திய விமானப் படையின் பயிற்சிக்காக பிரிட்டனின் ஹாக் ரக போர் பயிற்சி விமானங்கள் வாங்கப்படவுள்ளன. விமானப் படையின் புதிய விமானிகளுக்கு இந்த விமானங்களில் இங்கிலாந்தில் வைத்தே பயிற்சி அளிக்கப்படும்.2012ம் ஆண்டுக்குள் 70 முதல் 80 மிக் விமானங்கள் நீக்கப்பட்டு, அவற்றுக்குப் பதிலாக ஹாக் விமானங்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும்.அமெரிக்காவுடன் இணைந்து இந்திய விமானப் படை நடத்திய பயிற்சியின்போது இந்திய விமானிகள் திறனை அமெரிக்கர்கள் மிகவும் பாராட்டினர். அமெரிக்காவின் எப்-16 ரக போர் விமானங்களை பல முறை இந்திய போர் விமானங்கள் முடக்கிக் காட்டின.இதை அமெரிக்க படையினர் மிகவும் பாராட்டியதோடு, நமது வீரர்களின் திறனைக் கண்டு வியந்தனர்.அடுத்து இந்திய விமானப் படை பிரான்ஸ், சிங்கப்பூர் ஆகிய நாட்டு விமானப் படைகளுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபடவுள்ளது என்றார் கிருஷ்ணசாமி.
நாக்பூர்:
2012ம் ஆண்டுக்குள் 80 மிக் ரக விமானங்கள் இந்திய விமானப் படையில் இருந்து நீக்கப்பட்டுவிடும் என விமானப் படைத் தளபதி ஏர் மார்ஷெல் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
மேலும் இந்திய விமானப் படையின் புதிய விமானிகளுக்கு இங்கிலாந்தில் பயிற்சி தரப்படும் என்றார்.
ரஷ்யாவைச் சேர்ந்த மிக் ரக விமானங்கள் தான் இந்திய விமானப் படையின் முக்கிய போர் விமானங்களாக இருந்து வருகின்றன. ஆனால், காலம் கடந்த இந்த விமானங்கள் தொடர்ந்து விபத்துள்ளாகி வருவதால் பெருமளவில் உயிர், பண நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.
இதையடுத்து மிகப் பழைய மிக் ரக விமானங்களை புதுப்பிக்கும் வேலையைக் கைவிட்டுவிட்டு, அவற்றை படையில் இருந்து நீக்கிவிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஏர் மார்ஷெல் தெரிவித்தார்.
நாக்பூர் விமானப் படைத் தளத்தில் நிருபர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி,
இந்திய விமானப் படையின் பயிற்சிக்காக பிரிட்டனின் ஹாக் ரக போர் பயிற்சி விமானங்கள் வாங்கப்படவுள்ளன. விமானப் படையின் புதிய விமானிகளுக்கு இந்த விமானங்களில் இங்கிலாந்தில் வைத்தே பயிற்சி அளிக்கப்படும்.
2012ம் ஆண்டுக்குள் 70 முதல் 80 மிக் விமானங்கள் நீக்கப்பட்டு, அவற்றுக்குப் பதிலாக ஹாக் விமானங்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும்.
அமெரிக்காவுடன் இணைந்து இந்திய விமானப் படை நடத்திய பயிற்சியின்போது இந்திய விமானிகள் திறனை அமெரிக்கர்கள் மிகவும் பாராட்டினர். அமெரிக்காவின் எப்-16 ரக போர் விமானங்களை பல முறை இந்திய போர் விமானங்கள் முடக்கிக் காட்டின.
இதை அமெரிக்க படையினர் மிகவும் பாராட்டியதோடு, நமது வீரர்களின் திறனைக் கண்டு வியந்தனர்.
அடுத்து இந்திய விமானப் படை பிரான்ஸ், சிங்கப்பூர் ஆகிய நாட்டு விமானப் படைகளுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபடவுள்ளது என்றார் கிருஷ்ணசாமி.
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications