புதிய பாதையில்ஆசிரியரைத் தொடர்பு கொள்ள
-->இனிய வாசகர்களே,
உங்களது பெருவாரியான ஆதரவுடன் தட்ஸ்தமிழ்.காம் தனது நான்காவது ஆண்டில் வெற்றிகரமாய் பயணித்துக் கொண்டிருக்கிறது. டாட்.காம் boom, பின்னர் இந்தத் துறையில் விழுந்த bomb என காலத்தின் பல்வேறு கட்டாயங்களையும் சந்தித்து முன்னேறி வந்திருக்கிறோம்.
வர்த்தகரீதியில் எங்களின் வெற்றிப் பயணத்துக்கு , உறுதுணையாய் நின்று வரும் வாசகர்களே காரணம். இதனால், உங்களுக்கே என் முதல் நன்றிகள்.
நாங்கள் வெறும் செய்தித் தளமாக தொடர்ந்து கொண்டிருப்பதில் எங்களுக்கும் உங்களில் பலருக்கும் உடன்பாடில்லை. இதை நூற்றுக்கணக்கான வாசகர்கள் மெயில்களின் மூலம் மீண்டும், மீண்டும் தெரிவித்தே வந்திருக்கிறீர்கள்.
உங்களின் கோரிக்கையை ஏற்று இலக்கியப் பகுதியை மீண்டும் தொடங்கியிருக்கிறோம்.
தமிழின் தொன்மை இலக்கியத்தில் மூழ்கிட எத்தனை டாம்.காம்கள் தொடங்கினாலும் போதாது. அவ்வளவு ஆழமும், செறிவும் நிறைந்தது நம் இலக்கியப் பழமை.
பழமை இலக்கியத்தைச் சார்ந்தும், அதை எளிமைப்படுத்தியும் எழுதப்பட்டு வரும் சமகால இலக்கியப் படைப்புகளுக்கு (Contemporary arts and literature)சமீபகாலமாய் மாபெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
அப்பா வைத்துவிட்டுப் போன சொத்துக்களை விற்றுத்தான் இலக்கிய ஏடுகள் நடத்த முடியும் என்ற காலம் போய், சம கால இலக்கிய பத்திரிக்கைகள் வர்த்தகரீதியிலும் வெற்றி நடை போட ஆரம்பித்திருப்பது தமிழ் மற்றும் தமிழர்களின் வெற்றியாகத் தான் கருத முடிகிறது.
இத்தகைய புதிய சூழலில் புதுமை இலக்கியத்தைத் தவிர்த்துவிட்டு எங்களை முழுமையான தமிழ்த் தளமாக சொல்லிக் கொள்வதில் இருக்கும் அர்த்தமின்மையை புரிந்து கொண்டிருக்கிறோம்.
இதன் விளைவே, இலக்கிய பகுதியுடன் வந்திருக்கும் புதிய தட்ஸ்தமிழ்.காம். இதில் புதுமையான படைப்பிலக்கியத்தில் முன்னணியில் இருக்கும் எழுத்துலக கர்த்தாக்கள் தொடர்ந்து எழுத இருக்கிறார்கள். தட்ஸ்தமிழ்.காமில் எழுதிட முன் வந்த அவர்களுக்கும் என் நன்றி.
எழுத்துத் தாகம் கொண்ட யார் வேண்டுமானாலும் தங்களது படைப்புகளை தட்ஸ்தமிழ்.காமில் வெளியிடலாம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
எழுத்து வேட்கை கொண்ட வாசகர்களும் தங்களது படைப்புகளை அனுப்பலாம். உங்கள் படைப்புகளுடன், நீங்கள் பயன்படுத்திய எழுத்துருவின் (Fonts)பெயரையும் குறிப்பிடவும்.
வழக்கமான செய்திகள் என்றில்லாமல் தமிழகத்தை, தமிழர்களை பாதிக்கின்ற, உலகில் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழ் சமுதாயத்தினர் குறித்த விஷயங்களில் இனி கவனம் செலுத்தப் போகிறோம்.
உங்கள் பகுதி தமிழ் சங்கங்கள், நீங்கள் பங்கேற்றுள்ள அமைப்புகள் நடத்தும் சமூக நிகழ்ச்சிகள் குறித்தும் எங்களுக்கு செய்திகளை அனுப்பலாம். நாம் அனைவரும் இணைந்து உலக அளவிலான தமிழ்ச் சங்கங்களை ஒருங்கிணைக்க முயல்வோம். நம் இன்ப, துன்பங்களை நமக்குள் பகிர்ந்து கொள்வோம்.
சர்வதேச புகழ் பெற்ற இந்திய ஜோதிட விற்பன்னர் பிஜேன் தாருவாலாவின் சேவைகளையும்அறிமுகப்படுத்தியுள்ளோம்.
அதே போல வேளாங்கண்ணி மாதா கோவில், பெங்களூர் இன்பான்ட் ஜீசஸ் போன்ற ஆலயங்களுக்கு நன்றிசெலுத்தும் (Thanks giving) வகையில் அதற்கான பகுதியைத் தொடங்கச் சொல்லி ஏராளமான கிருஸ்துவ மற்றும்பிற மத வாசகர்களும் கோரிக்கைகள் அனுப்பி இருக்கிறார்கள். அதையும் பரிசீலித்து வருகிறோம். விரைவில்அந்தப் பகுதி தொடங்கப்படும்.
தட்ஸ்தமிழ்.காமின் இந்தப் புதிய வண்ணமும் வடிவமும் உங்களுக்கும் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். செய்த மாற்றங்கள் சரியா? செய்ய வேண்டிய மாற்றங்கள் என்ன? புதிதாய் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதை எனக்கு, [email protected] முகவரிக்கு எழுதுங்கள்.
இனி நமக்குள் அடிக்கடி உரையாடுவோம்...
- ஆசிரியர்
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி










Click it and Unblock the Notifications