அமெரிக்காவிலிருந்து வருவதில் தாமதம்: வைகோ கோரிக்கை ஏற்பு
சென்னை:
அமெரிக்காவில் இருந்து இம்மாதம் 20ம் தேதிக்குப் பதிலாக 22ம் தேதி சென்னை திரும்ப அனுமதிக்குமாறு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விடுத்த கோரிக்கையை உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுவிட்டது.
பொடா சட்டத்தில் கைதாகி இப்போது ஜாமீனில் இருக்கும் வைகோ நீதிமன்ற அனுமியுடன் சிகாக்கோ சென்றார்.
சிகாக்கோவில் இருந்து சென்னை திரும்ப 20ம் தேதிக்கு முன் விமான டிக்கெட் கிடைக்காததால், இரண்டு நாள் தாமதமாக வருவேன் என்று உயர் நீதிமன்றத்தில் தனது வழக்கறிஞர் மூலம் தாக்கல் செய்த தனது புதிய மனுவில் வைகோ கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி தினகர், நீதிபதி சொக்கலிங்கம் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், வைகோவின் கோரிக்கையை ஏற்பதாக அறிவித்துள்ளது.
ஜூன் 20ம் தேதி இரவு ஏர் இந்தியா விமானம் மூலம் வைகோ சென்னை கிளம்புகிறார். 22ம் தேதி மும்பை வந்திறங்கி அங்கிருந்து அன்றே அவர் சென்னை வருவார் என நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.
தனது 11 மாத பேத்தியை மகளிடம் விட்டுவிட்டு வருவதற்காக தன் மனைவியுடன் அமெரிக்கா சென்றார் வைகோ.
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications