விஜயகாந்த் மீது பாமக கடும் ஜாதி தாக்கு
பாமக தலைவர் ராமதாஸின் மகன் டாக்டர் அன்புமணியை மறைமுகமாக விமர்சித்துப் பேசிய விஜயகாந்த்துக்கு எதிராக விழுப்புரம் மாவட்டத்தில் பாமகவினர் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர்.
கள்ளக்குறிச்சியில் சமீபத்தில் நடந்த ரசிகர் மன்ற நிகழ்ச்சியில் பேசிய விஜயகாந்த், திமுக, பாமகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் குறிப்பிட்ட துறைகளைக் கேட்டு பிடிவாதம் செய்ததை தாக்கி காட்டமாக பேசினார்.
மேலும, எம்பியாகமலேயே அமைச்சர் பதவியைப் பெற்ற அன்புமணியையும் அவரது தந்தையான பாமக நிறுவனர் ராமதாஸையும் போட்டுத் தாக்கினார்.
விஜயகாந்த்தின் பேச்சு பாமகவினரை உசுப்பி விட்டுள்ளது. திட்டக்குடி பகுதி பாமக இளைஞர் சங்கம், வன்னியர் இளைஞர் சங்கம் சார்பில் விஜயகாந்த்தைக் கண்டித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன.
அதில், தமிழன் என்ற முகமூடியுடன் பிழைப்பு நடத்திக் கொண்டு வாய் சவடால் விடும் தெலுங்கு நாயுடு விஜயகாந்த்தே...
மறுமலர்ச்சி படத்தில் நடிக்க மறுத்தாய்..
நாயுடு தி கிரேட் படத்தில் மட்டும் நடித்தாய்..
உன் ஜாதி வெறி தெரியாதா?
என்று ஒருமையில் விளித்து மிகக் காட்டமான வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன.
அரைவேக்காடு: ராமதாசும் தாக்கு
இந் நிலையில் இன்று சென்னையில் நிருபர்களிடம் பேசிய பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்,
அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால், அப்படி வருபவர் அரைவேக்காட்டுத்தனமாக பேசக் கூடாது. ஆனால், விஜய்காந்த் அப்படித்தான் பேசி வருகிறார். ஏதோ அன்புமணி மட்டும் தான் தேர்தலில் போட்டியிடாமல் மத்திய அமைச்சராகிவிட்டதைப் போல விஜய்காந்து பேசுகிறார்.
நரசிம்மராவ் பிரதமரானபோது எந்த அவையிலும் அவர் உறுப்பினரில்லை. மேலும் மத்திய அமைச்சர்களாகியுள்ள சிவராஜ் பாட்டீல், பி.எம்.சயீதும் கூட மாநிலங்களை மூலம் தான் எம்.பியாகப் போகின்றனர்.
ராஜாஜியே மேல்சபை மூலமாகத் தான் எம்.எல்.சியாகி முதல்வராக இருந்தார். 1954ல் முதல்வராகும்போது காமராஜர் கூட எம்.எல்.ஏ. அல்ல.
இதையெல்லாம் தெரியாத அரைவேக்காடுகள் தான் அன்புமணி மந்திரியாகிவிட்டதாக வயிற்றெரிச்சல் தாங்காமல் பேசுகின்றனர்.
2006ம் ஆண்டுக்கு முன் 2005ம் ஆண்டு பிப்ரவரியிலேயே சட்டமன்றத் தேர்தலை நடத்தும் முடிவுக்கு ஜெயலலிதா வந்துவிட்டதாக தகவல்கள் வருகின்றன. இதனால் தான் சலுகை மழைகளைக் கொட்டி வருகிறார்.
அடுத்து வரும் ஆட்சி நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கட்டும் என்ற நல்ல எண்ணமே இதற்குக் காரணம் என்றார் ராமதாஸ்.
தாக்குறார்.. விஜய்காந்த் தாக்குறார்..
-
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications