டட்ச் முத்தரப்பு கிரிக்கெட்டில் இந்தியா
சிட்னி:
இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் பங்கு பெறும் டட்ச் முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் உறுதி செய்யப்பட்டு அதற்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஹாலந்தில் கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் முத்தரப்பு போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதில் கலந்து கொள்வது தொடர்பாக இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ஒரு உடன்பாடு எட்டப்படாமல் இருந்தது.
இந் நிலையில், மூன்று நாடுகள் போட்டித் தொடரில் விளையாட சம்மதித்துள்ளதாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு அறிவித்துள்ளது. போட்டித் தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் 21: இந்தியா- பாகிஸ்தான்
ஆகஸ்ட் 23: இந்தியா- ஆஸ்திரேலியா
ஆகஸ்ட் 25: ஆஸ்திரேலியா- பாகிஸ்தான்
ஆகஸ்ட் 28: இறுதி ஆட்டம்
இந்தப் போட்டித் தொடரை அடுத்து இங்கிலாந்தில் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் செப்டம்பர் மாதம் தொடங்கவிருக்கின்றன.
தர வரிசை: 5ம் இடத்தில் இந்தியா
இதற்கிடையே சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ள ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான அணிகளின் தர வரிசையில் இந்திய அணி 5 வது இடத்தில் உள்ளது.
136 புள்ளிகள் பெற்று ஆஸ்திரேலியா முதலிடத்திலும், தென் ஆப்பிரிக்கா (113 புள்ளி) 2ம் இடத்திலும், இலங்கை (110 புள்ளி) 3ம் இடத்திலும், நியூசிலாந்து (109 புள்ளிகள்) 4ம் இடத்திலும் உள்ளன. இந்தியா 107 புள்ளிகள் பெற்று 5வது இடத்தில் உள்ளன.
பாகிஸ்தான் 106 புள்ளிகளுடன் 6ம் இடத்திலும், இங்கிலாந்து 105 புள்ளிகளுடன் 7ம் இடத்திலும், மேற்கிந்தியத் தீவுகள் 102 புள்ளிகளுடன் 8வது இடத்திலும் உள்ளன.
ஜிம்பாப்வே, கென்யா, வங்காளதேசம் ஆகிய நாடுகள் முறையே 9, 10, 11வது இடங்களில் உள்ளன.
-
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம்












Click it and Unblock the Notifications