மதுரை உயர் நீதிமன்றம்: 24ம் தேதி திறப்பு
சென்னை:
மதுரையில் அமைக்கப்பட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றக் கிளை ஜூலை 24ம் தேதி திறக்கப்படும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 17ம் தேதி திறக்கப்படும் என மத்திய சட்டத்துறை இணை அமைச்சர்வேங்கடபதி தெரிவித்திருந்தார்.
மதுரை உலகனேரியில் ரூ. 50 கோடி மதிப்பீட்டில் உயர்நீதிமன்றக் கிளை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால்,சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களின் எதிர்ப்பால் திறப்பு விழா பல முறை தள்ளி வைக்கப்பட்டது.
இதனால் மதுரை மற்றும் தென் மாவட்ட வழக்கறிஞர்கள் அதிருப்தியடைந்து கடந்த 3 நாட்களாக உண்ணாவிரதம்,நீதிமன்றப் புறக்கணிப்புப் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.
இந் நிலையில் வேங்கடபதி வெளியிட்ட அறிக்கையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.சி.லகோட்டியுடன்நடத்திய ஆலோசனைக்குப் பின்னர் மதுரை உயர்நீதிமன்றக் கிளை திறப்பு குறித்து இறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி ஜூலை 17ம் தேதி மதுரை கிளை திறப்பு விழா நடைபெறும். அதில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிஆர்.சி.லகோட்டி, மத்திய சட்ட அமைச்சர் எச்.ஆர்.பரத்வாஜ், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன்ரெட்டி, தமிழகத்தைச் சேர்ந்த 12 மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பர் எனத் தெரிவித்திருந்தார்.
இச் செய்தியை, மதுரையில் உண்ணாவிரதம் இருந்து வந்த வழக்கறிஞர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள்வழங்கியும் இதைக் கொண்டாடினர்.
இந் நிலையில் திறப்பு விழா 24ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக டெல்லியில் வந்த அறிவிப்பில்கூறப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி லகோட்டி 17ம் தேதி பிற நிகழ்ச்சிகளுக்குத் தேதிகொடுத்துவிட்டதால், தேதி மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
விழாவில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்வாரா என்று தெரியவில்லை.
-
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications