ஜூலையில் கட்சி ஆரம்பிக்கிறார் விஜயகாந்த் !
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சியினரின் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து தனது அரசியல் பிரவேசத்தைசீக்கிரமே அரங்கேற்ற நடிகர் விஜயகாந்த் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. வரும் 30ம் தேதி தனது புதிய கட்சிகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க அவர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ராமதாஸின் ஜாதி அரசியல் குறித்தும், அவரது மகன் அன்புமணி எம்.பி. ஆகாமலேயே மத்திய அமைச்சர்பதவிக்கு வந்தது குறித்தும் நடிகர் விஜயகாந்த் கருத்துக் கூறப் போக அது பாமகவினர் மத்தியில் பெரும்கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாமகவுக்கு தொண்டர் பலம் உள்ள வட மாவட்டங்களில் நடிகர் விஜயகாந்த்துக்கு எதிராக அவரது உருவபொம்மையை எரிப்பதும், விஜயகாந்த் ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்துவதும், ரசிகர் மன்றங்கள் மீது தாக்குதல்நடத்துவதுமாக பாமகவினர் உள்ளனர்.
பாமகவினருக்கு ஈடாக விஜயகாந்த் ரசிகர்களும் பதில் தாக்குதலில் இறங்கியுள்ளனர். இதனால் வட மாவட்டங்கள்பலவற்றில் பதற்றம் அதிகரித்து வருகிறது.
இந் நிலையில் நடிகர் விஜயகாந்த் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளின் அவரச ஆலோசனைக் கூட்டத்தைசென்னையில் கூட்டியுள்ளார். வரும் 30ம் தேதி சென்னை வருமாறு அனைத்து மாவட்ட ரசிகர் மன்றநிர்வாகிகளையும் தொலைபேசி மூலம் விஜயகாந்த்தே நேரடியாக அழைத்துள்ளார்.
ஜூலை 1ம் தேதி வட பழனியில் உள்ள விஜயகாந்த்தின் கல்யாண மண்டபமான ஆண்டாள் அழகர் கல்யாணமண்டபத்தில் மன்ற நிர்வாகிகளுடன் விஜயகாந்த் முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது புதிய அரசியல் கட்சி தொடங்குவது குறித்து ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம்இறுதி ஆலோசனை கேட்கிறார். கட்சியின் பெயரும், கொடியும் கூட முடிவாகி விட்டதாக செய்திகள் கசிகின்றன.இதுகுறித்து நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்த பிறகு முறைப்படி விஜயகாந்த் அறிவிப்பு வெளியிடுகிறார்.
இதற்கிடையே முதல்வர் ஜெயலலிதாவை விஜயகாந்த்சந்தித்து பாமகவினரின் தாக்குதலைத் தடுத்து நிறுத்தும்படிகோரிக்கை வைக்கப்போவதாகவும் கூறப்படுகிறது.
தனது அரசியல் பிரவேசத்தையடுத்து பாமகவுக்கு எதிராக தீவிர பிரசாரத்தில் விஜயகாந்த் இறங்கக் கூடும் என்றும்எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே சாலிகிராமம், கண்ணம்மாள் தெருவில் இருக்கும் விஜயகாந்த் வீட்டிற்கும், அவருக்குச் சொந்தமானஆண்டாள் அழகர் கல்யாண மண்டபத்துக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications