தமிழக காங்.க்கு புதிய நிர்வாகிகள்: வாசன்
சென்னை:
தமிழக காங்கிரசுக்கு புதிய நிர்வாகிகள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என தமிழக காங்கிரஸ் தலைவர் வாசன்கூறினார்.
இது தொடர்பாக நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
ஆளுநர்களை மாற்ற வேண்டும் என்று மத்திய அரசு திட்டமிடவில்லை. பாஜகவினர்தான் அத்தகைய தவறானபிரசாரத்தை செய்து வருகிறார்கள். புதுவை ஆளுநர் பதவி விலக வேண்டும் என்று மத்திய அரசுவற்புறுத்தவில்லை.
ராமதாஸ்-விஜயகாந்த் மோதல் தொடர்பாக பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையைபடித்தேன். அதன் மூலம் இந்த பிரச்சினை இனி முடிவுக்கு வந்து விடும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சிக்கு புதிய நிர்வாகிகள் நியமிப்பது பற்றிய பேச்சுவார்த்தை டெல்லியில்நடந்து வருகிறது. அதன்பிறகு மாநில அளவில் புதிய நிர்வாகிகள் நியமிப்பது குறித்து பேச்சு வார்த்தைநடைபெறும். எனவே தமிழக காங்கிரசுக்கு புதிய நிர்வாகிகள் விரைவில் நியமிக்கப்படுவார்கள்.
அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன. இதனால்மாணவர்களின் கல்வித் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது. பள்ளிக்கூடங்கள் திறந்து 2 வாரங்களாகியும் இன்னும்பாடப் புத்தகங்கள் சரிவர கிடைக்கவில்லை. இந் நிலை தொடர்ந்தால் கல்வித் துறையில் தமிழகம் பின்தங்கியநிலைக்கு சென்றுவிடும்.
ஆபத்தான நேரத்தில் அரசுக்கு உதவி கரம் நீட்டியவர்கள் என்று கூட பார்க்காமால் இரவோடு இரவாக தற்காலஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். ஜெயலலிதாவின் இந்த நடவடிக்கைக்கு ஜனநாயக முற்போக்குகூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்ததால், பணி நீக்கம் செய்யப்பட்ட 48 மணி நேரத்திற்குள் மீண்டும்அவர்களுக்கு வேலை வழங்கப்பட்டது.
மக்கள் விரோத நடவடிக்கைகளினால் மக்களவைத் தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. இப்போதுமக்களை கவர தினம் ஒரு திட்டம் என ஜெயலலிதா அறிவித்து வருகிறார். ஓட்டு வங்கியை குறி வைத்துஜெயலலிதா செய்யும் இத்தகைய இனி தமிழக மக்கள் ஏமாறமாட்டார்கள். மக்களவைத் தேர்தலில் பாடம்புகட்டியதைப் போன்று வரும் சட்டசபைத் தேர்தலிலும் அதிமுகவுக்கு தகுந்த பாடம் கற்பிக்க தமிழக மக்கள்தயாராகி வருகின்றனர் என்று வாசன் கூறினார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications