தமிழகத்துக்கு 5 புதிய ரயில்கள்
டெல்லி:
மதுரை-டெல்லி, சென்னை-ஹூப்ளி, சென்னை- கும்பகோணம், சென்னை- தென்காசி,சென்னை-நாகர்கோவில் இடையே புதிய ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே பட்ஜெட்டில்அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல சென்ட்ரல்-தாம்பரம், மதுரை-மானாமதுரை-ராமநாதபுரம், திருச்சி-காரைக்குடி-மானாமதுரை இடையே உள்ள மீட்டர் கேஜ் பாதைகள் மாற்றப்பட்டு, அகல ரயில் பாதைஅமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மொத்தம் 32 புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் 5 ரயில்கள்தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
2004-05ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை ரயில்வேதுறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் இன்றுநாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அதில் தமிழகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் விவரம்:
மதுரையில் இருந்து டெல்லிக்கு சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் என்ற புதிய நேரடி ரயில்இயக்கப்படவுள்ளது.
சென்னையிலிருந்து 4 ரயில்கள்:
அதே போல சென்னை எழும்பூரில் இருந்து மதுரை, ராஜபாளையம் வழியாக தென்காசிக்கு புதியஎக்ஸ்பிரஸ் ரயில் விடப்படும்.
எழும்பூரில் இருந்து கும்பகோணத்துக்கு தஞ்சாவூர் வழியார் புதிதாக எக்ஸ்பிரஸ் ரயில்இயக்கப்படும்.
சென்னை சென்ட்ரலில் இருந்து கர்நாடக மாநிலம் ஹூப்ளிக்கு புதிய ரயில் விடப்படவுள்ளது.
அதே போல சென்ட்ரலில் இருந்து நாகர்கோவிலுக்கும் புதிய ரயில் இயக்கப்படவுள்ளது.
ஸ்ரீபெரும்புதூருக்கு ரயில் பாதை:
சென்னையிலிருந்து ஸ்ரீபெரும்புதூருக்கு புதிய ரயில் பாதை அமைப்பது குறித்து ஆய்வுப் பணிகள்தொடங்கப்படும்.
சேலம்-பெங்களூர் இரு வழிப் பாதை:
அதே போல சேலம்-பெங்களூர் இடையிலான ஒரு வழிப் பாதையை இரு வழி அகல ரயில்பாதைகளாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான சர்வே பணிகள் இந்த ஆண்டுதொடங்கப்படும்.
இவ்வாறு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications