அன்புமணியின் பேச்சால் நாடாளுமன்றத்தில் கூச்சல்
டெல்லி:
குஷ்ட நோய் ஒரு ஒட்டுவாரொட்டி (communicable disease) நோய் என நலத்துறை அமைச்சர்டாக்டர் அன்புமணி கூறியதால் மாநிலங்களவையில் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது.
கேள்வி நேரத்தின்போது பதில் அளித்த அமைச்சர் இவ்வாறு கூறியதற்கு பாஜக உறுப்பினர்களானசுஷ்மா சுவராஜ் (முன்னாள் நலத்துறை அமைச்சர்), அலுவாலியா, முரளிமனோகர் ஜோஷி ஆகியோர்கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
அவர்கள் பேசுகையில், இந்த நோய் ஒருவரைத் தொடுவதால் பரவுவதில்லை. இது குறித்துவிழிப்புணர்வை ஏற்படுத்த நாடு தழுவிய அளவில் மத்திய நலத்துறை அமைச்சகமே இயக்கம்நடத்தி வருகிறது.
இந் நிலையில் அந்தத் துறையின் அமைச்சரே இப்படிக் கூறலாமா?
மேலும், இந்த நோயாளிகளைத் தொடுவதால் குஷ்டம் பரவிவிடாது என்பதை மக்களிடையேஎடுத்துச் சொல்லும் வகையில் காந்தியடிகள் குஷ்டரோகிகளுக்கு பணிவிடைகள் செய்து வந்தார்என்றனர்.
குஷ்டம் குறித்து அமைச்சரின் கருத்து பொறுப்பில்லாத ஒன்று, இதனால் நாட்டில் இந்த நோய்குறித்து தவறான தகவல் பரவிவிடும் என்றனர்.
இதற்கு அன்புமணி பதில் சொல்ல முயன்றபோது பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத்தெரிவித்தனர். இதனால் கூச்சல் நிலவியது.
அப்போது பேசிய அவையின் தலைவர் பைரோன்சிங் ஷெகாவத், குஷ்டம் ஒட்டுவாரொட்டி நோயாஎன்பது குறித்து அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்த டாக்டர் அன்புமணி, குஷ்ட நோய் ஒட்டுவாரொட்டி நோய் தான் என்றார்.
இதனால் மீண்டும் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications