கொழும்பு தாக்குதல்: புலிகள் மீது அமெரிக்கா புகார்
கொழும்பு:
கொழும்பில் நடந்த மனித வெடிகுண்டுத் தாக்குலுக்கு விடுதலைப் புலிகளே காரணம் எனஅமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் அருகே இந்த குண்டு வெடிப்பு நடந்த 4 போலீசார்இறந்தனர். இந் நிலையில் அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மனித வெடிகுண்டுத் தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்காவிட்டாலும், இது புலிகளின்கைவரிசையாகவே தோன்றுகிறது. அதற்கான அடையாளங்களைக் காண முடிகிறது. இந்தத்தாக்குதலை மிக வன்மையாக கண்டிக்கிறோம்.
வன்முறையை புலிகள் உடனே கைவிட வேண்டும். புலிகளிடம் இதை அமெரிக்கா தொடர்ந்துவலியுறுத்தி வருகிறது. அமைதி ஒப்பந்ததில் கூறப்பட்டுள்ளபடி அரசியல் கொலைகள் உள்ளிட்டஅனைத்து வன்முறைகளையும் புலிகள் நிறுத்த வேண்டும்.
மேலும் கிழக்கு இலங்கையில் நடந்து வரும் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வர இலங்கைஅரசும் விடுதலைப் புலிகளும் உரிய முயற்சிகளை எடுக்க வேண்டும் என அமெரிக்கா கூறியுள்ளது.
கொழும்பில் நடந்த தாக்குதலுக்கு நாங்கள் பொறுப்பல்ல என புலிகள் கூறியுள்ளதுகுறிப்பிடத்தக்கது. இதை கருணா தலைமையிலான கும்பல் தான் நடத்தியிருக்க வேணடும் என்றும்அவர்கள் கூறியுள்ளனர்.
ஆனால், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைக் கொல்ல புலிகள் தான் இந்தத் தாக்குதலை நடத்தினர்என இலங்கை அரசு கூறுகிறது.
இந் நிலையில் மனித வெடிகுண்டாக வந்த பெண்ணுடன் வந்த இன்னொரு 29 வயது பெண்ணைஇலங்கை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதற்கிடையே, கிழக்கு இலங்கையில் தங்கள் மீது ராணுவத்தின் உதவியுடன் கருணா தரப்பினர்தாக்குதல் நடத்தி வருவதாக புலிகள் கூறுகின்றனர். இதற்கு பதிலடியாகவே கொழும்பில் புலிகள்தாக்குதல் நடத்தியதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
இந் நிலையில் நேற்று மட்டக்களப்பில் ஆயுதங்களுடன் திரிந்த கருணா ஆதரவாளர்கள் இருவரைபுலிகள் நேற்று சுட்டுக் கொன்றனர்.
மேலும் கருணாவின் கும்பலைச் சேர்ந்த 14 பேருக்கு அடைக்கலம் கொடுத்த புத்தத் துறவி மீதுநேற்று கிரனைட் குண்டுத் தாக்குதல் நடந்தது. புத்த வழிபாட்டு மையத்துக்குள் நடந்த இத்தாக்குதலில் அந்தத் துறவி உள்பட பலர் காயமடைந்தனர்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications