2 தமிழக மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து
டெல்லி:
கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளிக்க இந்தியமருத்துவக் கவுன்சில் மறுப்பு தெரிவித்துவிட்டது.
அதே போல திருநெல்வேலி மருத்துவக் கல்லூரிக்கு கூடுதலாக 50 இடங்கள் வழங்கவும் கவுன்சில்மறுப்பு தெரிவித்துவிட்டது.
தூத்துகுடி மருத்துவக் கல்லூரி 3 ஆண்டுளாக செயல்பட்டு வரும் நிலையில் இந்த அங்கீகாரம்மறுக்கப்பட்டுள்ளது. இதனால் 2ம் ஆண்டு, 3ம் ஆண்டு மாணவர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
அங்கீகாரம் மறுப்பால் இந்த ஆண்டு அங்கு புதிதாக மாணவர்களை சேர்க்க முடியாது.
கன்னியாகுமரி கல்லூரியில் இந்த ஆண்டு முதல் தான் மாணவர்கள் சேர்க்கை தொடங்க இருந்தது.இந் நிலையில் அதற்கும் தடை ஏற்பட்டுவிட்டது.
இந்தக் கல்லூரிகளில் போதிய அளவில் ஆசிரியர்கள் இல்லாததாலும், அடிப்படை வசதிகளும்போதுமான அளவில் இல்லாததாலும் அங்கீகாரம் தர மருத்துவ கவுன்சில் மறுத்துள்ளது.
இதனால் இந்த ஆண்டில் கூடுதலாக 250 மருத்துவ இடங்களை உருவாக்கும் தமிழக அரசின்திட்டத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி கல்லூரியில் அனாடமி மற்றும் பேத்தாலஜி லேப்கள் கூட இல்லை. கன்னியாகுமரிமருத்துவக் கல்லூரியில நூலகம் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications