சுவிஸ் ஓபன் டென்னிஸ் : பயஸ் ஜோடி வெற்றி
கஸ்தாத் :
சுவிஸ் ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் லியாண்டர் பயஸ்----- டேவிட் ரிகிள் ஜோடி சாம்பியன் பட்டம்வென்றது.
சுவிட்சர்லாந்தின் கஸ்தாத் நகரில் நடைபெற்று வரும் சுவிஸ் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர்பிரிவு அரையிறுதிப் போட்டியில் நடப்புச் சாம்பியன்களான இந்தியாவின் லியாண்டர் பயஸ், செக் குடியரசின்டேவிட் ரிகிள் ஜோடி கிள் 6--4, 6--4 என்ற நேர்செட்களில் அமெரிக்காவின் ஜார்ட் பால்மர், செக் குடியரசின் பால்விஸ்நர் ஜோடியைத் தோற்கடித்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
அதேபோல் மற்றொரு அரையிறுதியில் ருமேனியாவின் அந்தரீ பாவெல், பெல்ஜியத்தின் தாமஸ் வேன்ஹெளத்ஜோடியை சுவிட்சர்லாந்தின் மார்க் ரோசர்ட், வாவ்ருங்கா ஜோடி தோற்கடித்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
இறுதிப் போட்டியில் லியாண்டர் பயஸ்- டேவிட் ரிகிள் ஜோடி 6-2, 6-4 என்ற செட் கணக்கில் சுவிஸ் ஜோடியைத்தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது.
பெடரர் சாம்பியன்:
விம்பிள்டன் சாம்பியன் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், சுவிஸ் ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர்கோப்பையை வென்றார்.
அவர் இறுதிப் போட்டியில் ரஷியாவின் இகோர் அந்தரீவை 6--2, 6--3, 5--7, 6--3 என்ற செட் கணக்கில்தோற்கடித்தார்.
உலகத் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் பெடரர் தனது சொந்த நாட்டில் பெறும் முதல் வெற்றி இதுவாகும்.2000, 2001 மற்றும் 2003 ஆண்டுகளில் நடந்த சுவிஸ் ஓபன் இறுதிப் போட்டிகளில் அவர் தோற்றதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications