மணி அடித்து பாமக நூதன போராட்டம்
சென்னை:
தமிழக அரசு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி பாமகசார்பில் சென்னையில் மணி அடித்து போராட்டம் நடத்தப்பட்டது.
கல்விக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும், பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் நிலவும் குழப்பத்தைகண்டும் காணாமல் இருக்கும் போக்கை தமிழக அரசு கைவிட வேண்டும், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர்பாலகுருசாமியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த நூதனப் போராட்டத்தைபாமக நடத்தியது.
வள்ளுவர் கோட்டம் எதிரே, பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமையில் அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள்கலந்து கொண்டு பெரிய பெரிய மணிகளை ஒலித்து போராட்டம் நடத்தினர்.
பின்னர் ஜி.கே.மணி பேசுகையில், ராமன் கமிட்டி, சுப்ரமணியம் கமிட்டி ஆகியவற்றைக் கலைத்து விட்டு, சமூகநீதியிலும், மாணவர்கள் மீதும், ஏழை, எளியோர் மீதும் அக்கறை கொண்ட புதிய கமிட்டியை தமிழக அரசு நியமிக்கவேண்டும்.
கல்விக் கட்டணத்தைக் குறைத்து மாணவர்கள் மீதான சுமையைக் குறைக்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழகதுணைவேந்தர் பாலகுருசாமியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications