ஜெ. மீதான டிவி வழக்கு: 20ம் தேதிக்கு ஒத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கடந்த அதிமுக ஆட்சியில் பஞ்சாயத்துகளுக்கு கலர் டி.வி. வாங்கியதில் ரூ.10 கோடி ஊழல் செய்ததாக முதல்வர்ஜெயலலிதா மீது தொடரப்பட்ட வழக்கில், விசாரணை வரும் 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, நெடுஞ்செழியன், பாஸ்கரன், முன்னாள் தலைமை செயலாளர் அரிபாஸ்கர்உள்பட 11 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு தனி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. இவர்களில்நெடுஞ்செழியன் மரணம் அடைந்ததால் அவர் பெயர் வழக்கிலிருந்து நீக்கப்பட்டது.

ஜெயலலிதா, சசிகலா, பாஸ்கரன் மூவரையும் தனி நீதிமன்றம் இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்துஉத்தரவிட்டது. செல்வ கணபதி உள்பட மற்ற 7 பேருக்கு 5 ஆண்டு தண்டனையும், அபராதமும் விதித்தது.

ஜெயலலிதா, சசிகலா இருவரும் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கடந்த திமுக அரசுசென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. நீதிபதி ராமலிங்கம் இந்த வழக்கை விசாரித்து வருகிறார்.இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது.

ஆனால் அரசுத் தரப்பு வழக்கறிஞர் சுப்ரமணியம் ஆஜராகவில்லை. திமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்விடுதலை, ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து திமுக அரசு மேல் முறையீடு செய்தது. இப்போது அதிமுக அரசுஉள்ளது. எனவே சுயேட்சையான வழக்கறிஞர் ஒருவரை அரசு வழக்கறிஞராக நியமிக்க வேண்டும் என்றுகூறினார்.

இதையடுத்து ஜெயலலிதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜோதி, இந்த வழக்கில் திமுக சார்பில் விடுதலைபேசுவதற்கு எந்த அதிகாரமும் கிடையாது என்றார். இதனால் விடுதலைக்கும் ஜோதிக்கும் இடையே கடுமையானவாக்குவாதம் நிகழ்ந்தது. நீதிபதி தலையிட்டு அமைதிப்படுத்தினார்.

பின்னர் ஜோதி கூறுகையில், கடந்த ஆட்சியின் போது இந்த மேல் முறையிட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்தவிஷயத்தில் அரசு நடைமுறை எதுவும் கடைபிடிக்கப்படவில்லை. எனவே இது விசாரணைக்கு உகந்தது அல்ல.இந்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய அரசு வழக்கறிஞர் ஸ்ரீதர், இந்த வழக்கில் வாதாட சுப்ரமணியம் மறுத்துவிட்டார்.அவருக்குப் பதிலாக ராஜேந்திரன் வழக்கறிஞராக நியமிக்கப்படுகிறார். எனவே வழக்கு விசாரணைக்கு காலஅவகாசம் வேண்டும் என்று கோரினார்.

இதையடுத்து இந்த வழக்கின் அடுத்த விசாரணை 20ம் தேதி நடைபெறும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+