நெல்லை---சென்னை: வைகோ 42 நாள் நடைபயணம்

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி:

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வரும் ஆகஸ்டு 5ம் தேதி முதல் நெல்லையிலிருந்து சென்னைக்கு 42 நாட்கள்நடைபயணம் செல்கிறார். இந்த நடைபயணத்துக்கு "மறுமலர்ச்சி பயணம்" என்று பெயரிடப்பட்டு உள்ளது.

மதிமுகவின் 13-வது பொதுக்குழு கூட்டம் நெல்லை மாவட்டம் தாழையூத்து அண்ணா நகரில் நடந்தது.

கூட்டத்தில் 48 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் வைகோ பேசியதாவது:-

மக்களவைத் தேர்தலுக்கு பிறகு டெல்லிக்குச் சென்றபோது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி என்னை அன்பாகவரவேற்று மரியாதையோடு நடத்தினார். பிரதமர் மன்மோகன்சிங், நீங்கள் தேர்தலில் மின்சாரம் பாய்ச்சியதுபோல பேசிய பேச்சு மக்களை கவர்ந்ததாக தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தன்னிடம் கூறியதாக சொன்னார்.

பிரதமராக அவர் அறிவிக்கப்பட்ட பின்பு அவரை சந்தித்து 30 நிமிடங்கள் பேசினேன். அப்போது சேது சமுத்திரதிட்டத்தை பற்றி வலியுறுத்தினேன். நான் கூறியதை அவர் குறிப்பெடுத்துக் கொண்டார்.

பாஜகவோடு நமக்கு எதிர்காலத்தில் உடன்பாடு ஏற்படாது என்று பேசினார்.

கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் வைகோ கூறியதா வது:-

இந்த பொதுக்குழுவில் அனைத்து தீர்மானங்களையும் ஏகமனதாக நிறைவேற்றி இருக்கிறோம். அமைச்சரவையில்சேராதது குறித்து கட்சி எடுத்த முடிவு சரியானதே என்பதே பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்தாக இருந்தது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் குறைந்தபட்ச செயல்திட்டத்தில் கூறப்பட்டு இருந்த நதிநீர் இணைப்புத்திட்டம் பட்ஜெட்டில் இடம் பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது என்பதை சுட்டிகாட்டி அதை நிறைவேற்ற வேண்டும்என்று தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம்.

கன்னியாகுமரி, தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரத்தை இந்திய மருத்துவ கவுன்சில் ரத்துசெய்துள்ளதை திரும்பப் பெற வேண்டும் என்பதையும் பள்ளிபாட புத்தகங்கள் மாணவர்களுக்கு கிடைக்காததுபற்றியும், ஆசிரியர் காலி இடங்களை நிரப்பாமல் இருப்பதையும் சுட்டிக்காட்டி தீர்மானம் நிறைவேற்றிஇருக்கிறோம்.

கடந்த பாஜக ஆட்சியில் நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் திறக்கப்பட்ட சாவர்க்கர் உருவப்படத்தை அகற்றவேண்டும் என்று பிரதமரிடம் வலியுறுத்துவேன்.

மதிமுக சார்பில் தொலைக்காட்சி தொடங்க வேண்டும் என்று பொதுக்குழுவில் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால்அது பற்றி எந்த முடிவும் எடுக்கப்பட வில்லை.

கலைத்துறை, மருத்துவதுறை என்று எந்த துறையில் இருந்தும் யாரும் அரசியலுக்கு வரலாம்.

ஈழ தமிழர் பிரச்சினையில் இந்தியா தனது நன்மையைக் கருதி இந்த பேச்சுவார்த்தைக்கு ஆக்கப்பூர்வமாக உதவவேண்டும்.

திமுகவோடு மதிமுகவின் நட்பும் தோழமையும் நீடிக்கும். வருகிற சட்டமன்ற தேர்தலையும் இக்கூட்டணி சந்திக்கும்என்றார்.

பொதுக்குழுவில் வைகோவின் நடைபயணம் முதல் தீர்மானமாக நிறைவேற்றப் பட்டது. நெல்லையிலிருந்துஆகஸ்ட் 5ம் தேதி பயணத்தைத் தொடங்கி 42 நாட்கள் 1,025 கி.மீ. தூரம் நடந்து சென்று சென்னை தீவுத் திடலில்செப்டம்பர் 15ம் தேதி (அண்ணா பிறந்த நாள்) நிறைவு செய்கிறார் வைகோ. இந்த நடை பயணத்துக்கு"மறுமலர்ச்சி" பயணம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+