எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு கருணாநிதி வேண்டுகோள்
சென்னை:
தமிழகத்தில் தங்களது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கூரைப் பள்ளிக்கூடங்களை கட்டடங்களாகமாற்றுவதற்கு தொகுதி நிவாரண நிதியிலிருந்து தாராளமாக நிதியுதவி செய்து உதவுமாறு ஜனநாயக முற்போக்குக்கூட்டணியைச் சேர்ந்த எம்.பிக்கள், எம்.எல்.ஏக்களுக்கு திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக திமுக, மதிமுக, பாமக, காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பிக்கள்,எம்.எல்.ஏக்களுக்கு அவர் விடுத்துள்ள கடிதம்: கும்பகோணத்தில் நடந்த சம்பவத்தில் இருந்து கற்றுக் கொண்டபடிப்பினையாக, தங்களது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு மற்றும் அரசு சார்புடைய பள்ளிக் கட்டடங்கள்,கூரைகளில் இயங்கி வருவது தெரிந்தால், அவற்றை மேம்படுத்த நீங்கள் உதவ வேண்டும்.
உடனடியாக உங்களது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தேவையான நிதியை ஒதுக்கீடு செய்து அந்தக் கூரைகட்டடங்களை கான்க்ரீட் கட்டடங்களாக மாற்றுவதற்கு உரிய ஏற்பாட்டினை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்என்று கூறியுள்ளார் கருணாநிதி.
அரசுக்கு கோரிக்கை:
பொது கட்டடங்கள், பள்ளிகளில் தீயணைக்கும் கருவிகளை கட்டாயமாக வைக்க அரசு உத்தரவிட வேண்டும்என்று கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கடந்த காலங்களில் நடந்த விபத்துக்களிலிருந்து தமிழகஅரசு பாடம் கற்றுக் கொள்ளவில்லை. கடந்த ஜனவரி மாதம் திருச்சி ஸ்ரீரங்கத்தில் கல்யாண மண்டபத்தில் ஏற்பட்டதீவிபத்தில் 60 பேர் இறந்தனர்.
இதையடுத்து மாநிலம் முழுவதிலும் உள்ள கல்யாண மண்டபங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஸ்திரப்படுத்தஅரசு நடவடிக்கை எடுத்தது. ஆனால் அது தொடர்ச்சியாக கடைப்பிடிக்கப்படவில்லை, கண்காணிக்கப்படவில்லை.
பொது கட்டடங்கள், பள்ளிகள், கல்யாண மண்டபங்கள் போன்றவற்றில் தீயணைக்கும் கருவிகள் கண்டிப்பாகவைக்கப்பட வேண்டும், பாதுகாப்பாக வெளியேறும் வாசல்கள் வைக்கப்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டுஅதை அமல்படுத்த வேண்டும்.
கும்பகோணம் கொடூரத்திற்கு குறுகலான வாசல்படிகள், விதிமுறைகளை மீறிய பள்ளி நிர்வாகம் ஆகியவைதான்காரணம் எனக் கூறினார் கருணாநிதி.
-
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஜோதிடம் மூலம் புற்றுநோய் குணமா.. கோவை தவெக பெண் வேட்பாளரின் சர்ச்சை பின்னணி -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications