வசூல்ராஜாவுக்கு எதிராக டாக்டர்கள் வழக்கு
ஈரோடு:
வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்தின் பெயரை மாற்றக் கோரி அகில இந்திய மருத்துவர்கள் சங்கம் சென்னைஉயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்திய மருத்துவ சங்கத்தின் 239-வது மாநில செயற் குழு கூட்டம் ஈரோடில் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின்செய்தியாளர்களிடம் பேசிய இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் விஜயகுமார் கூறியதாவது:-
நடிகர் கமல் நடிக்கும் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். படத்தின் பெயரை மாற்றக் கோரி இயக்குநர் சரணுடன்பேச்சுவார்த்தை நடத்தினோம். அப்போது 17ம் தேதிக்குள் இதுகுறித்து முடிவை தெரிவிப்பதாக சரண்கூறியிருந்தார்.
எம்.பி.பி.எஸ். பட்டத்தை வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது என்று சட்டம் உள்ளது. அதையும் மீறி படத்திற்குபெயர் வைத்து உள்ளது மருத்துவத் தொழிலையே இழிவுபடுத்துவதாக உள்ளது.
வசூல்ராஜா என்பது கமலை மட்டுமே குறிக்கும் என்று சரண் கூறியுள்ளார். இந்த பதில் திருப்தியாக இல்லை.எனவே படத்தின் பெயரை மாற்றக்கோரி சென்னை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளோம். மேலும்படத்தின் பெயரை மாற்றாவிட்டால் போராட்டம் நடத்துவோம். அதற்காக போராட்டக்குழுவும் ஏற்படுத்தப்பட்டுஉள்ளது. இந்தப் படத்தில் மருத்துவர்களைக் கேலி செய்யும் எந்த காட்சியும் இடம் பெறக் கூடாது.
விபத்து காலத்தில் மருத்துவர்கள் சென்று உதவி செய்ய மண்டல அளவில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.டாக்டர்கள் தவறு செய்து நீதிமன்றம் தண்டனை வழங்கினால் மருத்துவ சங்கமும் அவர்கள் மீது நடவடிக்கைஎடுக்கும். தவறு செய்யும் டாக்டர்களுக்குச் சாதகமாக இந்திய மருத்துவ சங்கம் செயல்படாது.
கும்பகோணம் தீவிபத்தில் இந்திய மருத்துவ சங்கம் செய்த உதவிகளுக்கு பாராட்டுக்களையும், இறந்தகுழந்தைகளுக்கு இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறினார்.
பேட்டியின்போது துணைத் தலைவர் டாக்டர் சுகுமார், செயலாளர் டாக்டர் சடகோபன் ஆகியோர் உடன்இருந்தனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications