இந்துக்களை நான் அவமதிக்கவில்லை: டி.ஆர்.பாலு
டெல்லி:
இந்துக்களை அவமரியாதை செய்யும் வகையில் நான் கிறிஸ்தவ கூட்டத்தில் பேசவில்லை என்று மத்தியதரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.
சென்னையில் கிறிஸ்தவ மத போதகர் டி.ஜி.எஸ். தினகரன் நடத்திய பிராத்தனைக் கூட்டத்தில் கலந்து கொண்டடி.ஆர்.பாலு, தான் இந்துவாக பிறந்ததற்காக வெட்கப்படுகிறேன் என்று கூறியதாக பரபரப்பு செய்திகள்வெளியாகின.
பாலுவின் பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். பாலு பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும், இல்லாவிட்டால் அவரை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் என அவர்கள் கூறினர்.
இந் நிலையில் இதுகுறித்து டி.ஆர்.பாலு கூறுகையில், நான் ஒரு இந்துக் குடும்பத்தில் பிறந்தவன், மதச்சார்பற்ற ஒருகட்சியைச் சேர்ந்தவன். நான் ஏன் இந்துக்களை இழிவுபடுத்த வேண்டும்? இந்துக்களை நான் இழிவுபடுத்திப்பேசினேன் என்றால் தென் சென்னை தொகுதி மக்களால் நான் எப்படி 4 முறை எம்.பியாக தேர்வுசெய்யப்பட்டிருப்பேன்?
தினகரன் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் நான் இந்துக்களை இழிவுபடுத்திப் பேசவில்லை. மாறாக, நான் சார்ந்தபிற்பட்ட சமுதாயம், உயர் ஜாதிக்காரர்களால் எந்த அளவுக்கு நடத்தப்பட்டது என்பது குறித்து விளக்கிப்பேசினேன். ஒரே மதத்தில் ஜாதி என்ற பெயரில் எத்தனை பாகுபாடுகள் நிலவுகின்றன என்பதைத்தான் நான் சுட்டிக்காட்டினேன் என்றார் பாலு.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications