மீண்டும் ஒரு கற்பழிப்பு சாமியார்
சேலம்:
ஊட்டி அருகே கர்ப்பிணிப் பெண்ணை மானபங்கப்படுத்திய போலிச் சாமியார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,சேலத்தில் நிர்வாண பூஜை நடத்தி பல பெண்களைக் கற்பழித்த போலி சாமியார் தலைமறைவாகியுள்ளார்.
சேலம் மாவட்டம் அம்மா பேட்டையைச் சேர்ந்தவர் ஜெகந்தாதன் (50). இவர் தான் ஒரு மந்திரவாதி என்று கூறிக்கொண்டு ஜாதகம், ஜோசியம் பார்த்து வந்திருக்கிறார். இவரிடம் அதே ஊரைச் சேர்ந்த வசந்தா (40) என்ற காய்கறிவியாபாரம் செய்யும் பெண்மணி ஜாதகம் பார்க்கச் சென்றுள்ளார்.
ஜெகந்நாதன் வசந்தாவிடம் ஜாதகத்தில் தோஷம், அதற்குப் பரிகாரம் செய்கிறேன் என்று அவரது வீட்டிற்குஅடிக்கடி சென்றுள்ளார். ஒரு நாள் இரவு பரிகாரப் பூஜை நடத்த வேண்டும் என்று கூறி, ஒரு பொடியை நீரில்கரைத்து வசந்தாவிடம் கொடுத்து குடிக்கச் செய்துள்ளார்.
அதைக் குடித்ததும் வசந்தா அரை மயக்க நிலை அடைந்தார். பின்பு நிர்வாண பூஜை நடத்த வேண்டும் என்று கூறிகற்பழித்துள்ளார். அதன்பின்பு அடிக்கடி வசந்தா வீட்டுக்கு சென்று வந்திருக்கிறார். வசந்தாவிடம் ரூ.10,000கடனும் வாங்கியிருக்கிறார்.
இந் நிலையில் வசந்தா கர்ப்பம் ஆனார். இது தெரிந்து வீட்டிற்கு வருவதை ஜெகந்நாதன் தவிர்த்துள்ளார். வசந்தாநேரில் போய் தன்னைக் கல்யாணம் செய்து கொள்ள சொல்லி கேட்டபோது, ஜெகந்நாதன் மறுத்திருக்கிறார்.இதனையடுத்து வசந்தா ஊர்ப் பஞ்சாயத்துக்கு போய் இருக்கிறார்.
பஞ்சாயத்தார் திருமணம் செய்து கொள்ளச் சொல்லி வற்புறுத்தியும், ஜெகந்நாதன் அதை ஏற்காமல் காலம் கடத்திவந்துள்ளார்.இதன் பின்பு வசந்தா சேலம் அம்மாபேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இது தெரிந்து ஜெகந்நாதன் தலைமறைவாகி விட்டார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர். ஜெகந்நாதன்இதேபோல் பல்வேறு பெண்களை நிர்வாண பூஜை என்ற பெயரில் கற்பழித்திருக்கலாம் என்று போலீஸ் கருதுகிறது.வெளியில் தெரிந்தால் அவமானம் என்பதால் பலர் அதை மறைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
கர்ப்பிணியை பலாத்காரம் செய்த சாமியார் !
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications