இம்ப்ரூவ்மென்ட் தேர்வு முறை சரியே: நீதிமன்றம்
சென்னை :
இம்ப்ரூவ்மென்ட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கும், புதியதாக பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கும்இடையே வயது மூப்பை கணக்கிடக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இம்ப்ரூவ்மென்ட் தேர்வு எழுதியவர்கள் ஒரு வருடம் முழுவதும் நுழைவுத் தேர்வுக்காகத் தயார் செய்கிறார்கள்.அவர்களை, இந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வு எழுதி, நுழைவுத் தேர்வும் எழுதி, மருத்துவப்படிப்பில் சேரும்மாணவர்களுக்கு இணையாகக் கருதக் கூடாது. இம்ப்ரூவ்மென்ட் தேர்வு எழுதியவர்களுக்குத் தனியாக இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று கனியன் என்ற மாணவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் தலைமை நீதிபதி சுபாஷண் ரெட்டி, நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் ஆகியோர் அஹித்த தீர்ப்பின் விவரம்:
இம்ப்ரூவ்மென்ட் தேர்வுக்கான வாய்ப்பு அனைவருக்கும் வழங்கப்படுகிறது. இத்தேர்வை எழுதும் மாணவர்கள்,கடந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வில் தான் வாங்கிய மதிப்பெண்களை திரும்ப ஒப்படைத்துவிடுகிறார்கள். அதன்பிறகு நேரத்தையும் பணத்தையும் செலவிட்டு, அனைத்து பாடங்களிலும் மறுபடியும் தேர்வு எழுதுகிறார்கள்.இத்தனைக்கும் பிறகு அவர் மருத்துவக் கல்லூரியில் சேர அனுமதிக்கப்படாவிட்டால், ஓராண்டாக அவர்மேற்கொண்ட முயற்சி வீணாகிவிடும்.
இம்ப்ரூவ்மென்ட் தேர்வு முறையை அரசே கொண்டுவந்துள்ளது. இதனால் இம்ப்ரூவ்மென்ட் மாணவர்களுக்காகதனியாக இடம் ஒதுக்க முடியாது. இத்திட்டத்தை அரசு திரும்பப்பெறாத வரையில், இம்ப்ரூவ்மென்ட் தேர்வுஎழுதிய மாணவர்களும், புதிய மாணவர்களோடு சேர்ந்து போட்டியிட தகுதி உள்ளது.
அதே நேரத்தில் வயதைக் கருத்தில் கொள்ளும்போது, புதிய மாணவரோடு இம்ப்ரூவ்மென்ட் மாணவரைஒப்பிடக்கூடாது. இரு இம்ப்ரூவ்மென்ட் மாணவர்கள் ஒரே மதிப்பெண் பெற்றிருந்தால் அவர்களில் அதிகவயதுடையவருக்கு இடம் தரலாம். அதே போல புதிய மாணவர்கள் இருவர் ஒரே மதிப்பெண் பெற்றிருந்தால்அவர்களில் ஒருவருக்கு வயது அடிப்படையில் இடம் தரலாம் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications