புதன் கிரகத்துக்கு கிளம்பியது நாஸா விண் கலம்
ஹூஸ்டன்:
புதன் கிரகத்துக்கு (மெர்க்குரி) மெஸெஞ்சர் என்ற விண் கலத்தை அமெரிக்க விண் ஆராய்ச்சிநிறுவனமான நாஸா அனுப்பியுள்ளது.
வானிலை காரணமாக சில முறை ஒத்தி வைக்கப்பட்ட இந்த விண் கலத்கை ஏவும் நிகழ்ச்சி நேற்றுநடந்தது. சுமார் 7 ஆண்டுகள், 7.5 பில்லியன் கி.மீ. தூரம் விண்ணில் பயணித்து இந்தக் கலம் புதன்கிரகத்தை அடையும்.
சூரிய குடும்பத்தில் சூரியனுக்கு அருகில் உள்ள கோள் புதன் கிரகமாகும். 286 மில்லியன் செலவில்உருவாக்கப்பட்டுள்ள இந்த 2,442 பவுண்ட் எடையுள்ள செயற்கைக் கோள் நேற்றுஅமெரிக்காவின் டெல்டா 2 ரக ராக்கெட் மூலம் விண்ணிலி செலுத்தப்பட்டது.
புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கெனாவரல் விண்வெளித் தளத்தில் இருந்து இந்த ராக்கெட்செலுத்தப்பட்டது.
கடந்த 1974, 75ம் ஆண்டுகளில் மெரைனர் என்ற செயற்கைக் கோள் புதன் கிரகத்தின் அருகேசென்று படம் பிடித்தது. 30 ஆண்டுகளுக்குப் பின் இப்போது தான் அடுத்த கலம் அந்த கிரகத்துக்குஅனுப்பப்படுகிறது.
புதன் கிரகத்தை சுற்றி வந்து படமெடுப்பதோடு அதன் தட்பவெப்பம், கோள் உருவான முறைஆகியவை குறித்தும் மெஸெஞ்சர் கலம் ஆராயும்.
கோள்கள் தோன்றியபோது பூமியின் அளவில் இருந்ததாகக் கருதப்படும் புதன் கிரகம் இப்போதுநிலாவை விட கொஞ்சம் பெரிய அளவில் தான் உள்ளது. கிரகம் சுருங்கியதன் காரணம் என்ன,சூரியனுக்கு மிக அருகில் இருப்பதால் கதிர் வீச்சின் தாக்கத்தால் கிரகம் தேய்ந்து போனதா போன்றநுட்பமாக ஆய்வுகளை மெஸெஞ்சர் நடத்தவுள்ளது.
கடும் வெப்பம் நிலவினாலும் புதன் கிரகத்தில் நீர் உறைந்து போய் இருப்பதாகக் கருதப்படுகிறது.குறிப்பாக, சூரிய ஒளி படாத அதன் உச்சி மற்றும் கீழ் பகுதிகளில் நீர் இருக்க வேண்டும்கருதப்படுகிறது.
பகல் நேரத்தில் இந்த கிரகத்தின் வெப்பம் 1,100 டிகிரியைத் தாண்டும். இரவில் அடியோடுகுளிர்ந்து பூஜ்யம் டிகிரியைத் தொடும்.
இப்போது அனுப்பப்பட்டுள்ள மெஸெஞ்சர் செயற்கைக் கோள் வரும் 7 ஆண்டுகளில் 15 முறைசூரியனை சுற்றிவிட்டு, பூமியையும் ஒரு முறை நெருங்கிவிட்டு, வீனஸ் கிரகத்தை இருமுறைசுற்றிவிட்டே புதன் கிரகத்தை நெருங்கும்.
பூமியருகே இந்த செயற்கைக் கோள் வரும்போது, பூமியின் ஈர்ப்பு சக்தி, இதன் வேகத்தைக்கட்டுப்படுத்தி புதன் கிரகத்தின் ஈர்ப்பு சக்திக்குள் அனுப்பும்.
புதன் கிரகத்தில் மூன்றில் இரண்டு பங்கு இரும்பு தான் உள்ளதாகக் கருதப்படுகிறது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications