ஆடிட்டர் ஜெனரல் மீது ஜெயலலிதா பாய்ச்சல்
சென்னை:
தமிழகத்தின் நிதி நிலைமை மிகவும்கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறி, தனது அரசின் பெயரைக்கெடுக்க ஆடிட்டர் ஜெனரலுக்கு முயன்வதாக முதல்வர் ஜெயலலிதா கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் தமிழக நிதி நிலையை விளக்கி, நாடு முழுவதும் உள்ள பத்திரிக்கைகளில் முழு பக்கவிளம்பரமும் தந்துள்ளார்.
மத்திய, மாநில அரசுகள், துறைகளின் வரவு- செலவுகளைக் கண்காணிக்கும் ஆடிட்டர் ஜெனரல்அலுவலகத்தின் தமிழக பிரிவின் தலைமை ஆடிட்டர் தீதன் சமீபத்தில் செய்தியாளர்களிடம்பேசுகையில்,
தமிழக அரசின் வருமானத்துக்கும் செலவுகளுக்கும் உள்ள இடைவெளி தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும்,இது கவலை தரும் நிலையில் உள்ளதாகவும் கூறியிருந்தார். இந்த ஆண்டு அரசின் நிதிப் பற்றாக்குறை ரூ. 6,742கோடியாக அதிகரித்துள்ளதாகவும் கூறினார்.
அதே போல ஏகப்பட்ட கடன் வாங்கியுள்ள தமிழக அரசு, தனது வருவாயில் பெரும் பகுதியை வட்டி கட்டிக்கொண்டுள்ளதாகவும் கூறினார். இதற்கு தமிழக அரசின் பட்ஜெட்டும், கட்டுக்கடங்காத செலவுகளுமே காரணம்என்றார்.
இந் நிலையில் இந்தியாவின் தலைமை ஆடிட்டர் ஜெனரல் விஜயேந்திர கெளலுக்கு முதல்வர் ஜெயலலிதா இன்றுஎழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
எனது அரசின் பெயரைக் களங்கப்படுத்த தமிழகத்துக்கான தலைமை ஆடிட்டர் தீதன் முயன்றுள்ளார். இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடப்பதைத் தடுக்க அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பத்திரிக்கையாளர்களைக் கூப்பிட்டு தமிழக அரசின் நிதி நிலை குறித்து தீதன் பேட்டியளித்தது தவறு.அவரது பேட்டியின் மூலம் நானும், எனது அரசும் தமிழகத்துக்கு மொத்தம் ரூ. 11,000 கோடிஇழப்பை ஏற்படுத்திவிட்டது போன்ற பிரமை உருவாகியுள்ளது.
தீதன் இந்தச் செயல் சட்டமன்ற உரிமையை மீறுவதாகவும் அமைந்துள்ளது. ஏற்கனவே இந்தஅரசுக்கு எதிராக பத்திரிக்கைகள் நடத்தி வரும் பொய்ப் பிரச்சாரத்துக்கு ஆடிட்டர் ஜெனரலின்பேட்டி மேலும் உரும் சேர்ப்பதாக அமைந்துள்ளது.
எதிர்க் கட்சிகளுக்கு உதவும் வகையில் ஒரு மாநில அரசுக்கு எதிராக பத்திரிக்கையாளர்களைஅழைத்து ஆடிட்டர் ஜெனரல் பேட்டியளித்தது இதுவே முதல் முறையாகும்.
இன்னும் சட்டமன்றத்திலும், கவர்னரிடத்திலும் தாக்கல் செய்யப்படாத 2003-04ம் ஆண்டுக்கானதமிழக அரசின் வருவாய் இழப்பு குறித்தும் பத்திரிக்கையாளர்களிடம் விளக்கியுள்ளார் ஆடிட்டர்ஜெனரல். இது அரசியல் சட்டத்துக்கே முரணானது.
ஆட்டிடர் ஜெனரலை வைத்து எனது அரசின் மீது சேற்றை அள்ளி வீசவும், இது மோசமான அரசுஎன்பதைப் போன்ற தோற்றத்தை உருவாக்கவும் மத்திய அரசு முயற்சி செய்துள்ளது.
இது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கலாகும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
மேலும் தமிழக நிதி நிலையை விளக்கியும் ஆட்டிடர் ஜெனரலின் கருத்துக்களுக்கு பாயிண்ட்-பை-பாயிண்டாக விளக்கம் தந்தும் நாட்டின் அனைத்து முக்கியப் பத்திரிக்கைகளில் முழு பக்கவிளம்பரங்களையும் தந்துள்ளார் ஜெயலலிதா.
தமிழக நிதி நிலை: ஆடிட்டர் ஜெனரல் கவலை
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications