நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள்-போலீஸ் மோதல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி அறைக்குள் நுழைய முயன்ற வழக்கறிஞர்களைபோலீஸார் தடுத்து நிறுத்தியபோது இரு தரப்பினருக்கும் இடையே பெரும் தள்ளுள்ளு ஏற்பட்டு பரபரப்புஏற்பட்டது.

தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டிக்கு எதிராக வழக்கறிஞர்களில் ஒரு பிரிவினர் தொடர்ந்து காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அவரை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று கோரி வருகின்றனர்.

இன்றும் அவர்கள் நீதிமன்ற வளாகத்தில் ஊர்வலம் நடத்தினர். இதற்கு வழக்கறிஞர் கருப்பன் தலைமைதாங்கினார். பின்னர் ஒவ்வொரு நீதிமன்ற அறையாகச் சென்று வழக்கு விசாரணையை நடத்தக் கூடாது என்றுகோஷமிட்டனர்.

பின்னர் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டியின் அறைக்குள் நுழைய அவர்கள் முயற்சி செய்தனர். ஆனால்அவர்களை போலீஸார் தடுத்து வெளியேற்ற முயற்சித்தனர். இதனால் அங்கு பெரும் தள்ளுள்ளு ஏற்பட்டது.போலீஸாருக்கு எதிராக வழக்கறிஞர்கள் கோஷமிட்டனர்.

பின்னர் வழக்கறிஞர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன் பிறகே அங்கு அமைதி திரும்பியது. இதேகோரிக்கையை வலியுறுத்தி கோவையிலும் நீதிமன்றப் புறக்கணிப்பில் வழக்கறிஞர்கள் ஈடுபட்டனர்.

கரூரில் 19ம் தேதி பந்த்:

இதற்கிடையே, கரூர் மாவட்டத்தை மதுரை உயர் நீதிமன்றக் கிளையுடன் இணைக்கக் கோரி கரூர் மாவட்டத்தில்வருகிற 19ம் தேதி முழு அடைப்பு நடத்த வர்த்தகர் சங்கம் முடிவு செய்துள்ளது.

கரூர், தஞ்சாவூர் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்கள் முதலில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் அதிகாரவரம்பின் கீழ் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

பின்னர் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களின் தொடர் போராட்டத்தின் பின்னணியில், 9 நீதிபதிகள் குழு,இந்த 3 மாவட்டங்களையும் சென்னை உயர்நீதிமன்ற எல்லைக்குள்ளேயே தொடரலாம் என்று மத்திய அரசுக்குப்பரிந்துரை செய்தனர்.

மதுரைக்கு அருகே உள்ள இந்த மாவட்டங்களை சென்னை உயர் நீதிமன்றக் கிளையுடன் இணைத்ததற்கு கரூர்,திருச்சி, தஞ்சாவூர் வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில்இறங்கியுள்ளனர்.

இதனால் 3 மாவட்டங்களிலும் நீதிமன்றப் பணிகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந் நிலையில் கரூர்,திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களை மதுரையுடன் இணைக்கக் கோரி கரூரில் வரும் 19ம் தேதி கடையடைப்பு,கண்டனப் பேரணி ஆகியவற்றை நடத்த கரூர் மாவட்ட தொழில், வர்த்தக சங்கம் முடிவு செய்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+