தொடரும் இந்தியர்களின் உயிர் போராட்டம்
டெல்லி:
இராக்கில் இந்தியர்களைக் கடத்தி வைத்துள்ள தீவிரவாதிகளுடனான பேச்சுவார்த்தை 8வது நாளாகதடைபட்டுள்ளது.
தீவிரவாதிகளின் நிதிக் கோரிக்கைகளில் சிலவற்றை ஏற்க, இந்தியர்களை பணிக்கு அமர்த்தியகுவைத் கல்ப் லிங்க் நிறுவனம் முன் வரவில்லை. இதையடுத்து பேச்சு தடைபட்டுள்ளது.
தீவிரவாதிகளுடன் நேரடியாகப் பேச விரும்புவதாகவும், தீவிரவாதிகளால் அறிவிக்கப்பட்டதூதரான துலாய்மியுடன் இனியும் பேச மாட்டோம் எனவும் கல்ப் லிங்க் நிறுவனம் கூறிவிட்டது.
ஆனால், இதற்கு தீவிரவாதிகளிடம் இருந்து பதில் வரவில்லை. இதனால் அந்தர்யாமி, திலக்ராஜ்,சுக்தியோ சிங் ஆகிய இந்திய டிரக் டிரைவர்கள் தொடர்ந்து தீவிரவாதிகளின் பிடியிலேயே இருந்துவருகின்றனர். இவர்கள் ஜூலை 21ம் தேதி கடத்தப்பட்டனர்.
இராக்கில் அமெரிக்கப் படையினருக்கு உணவு சப்ளையில் ஈடுபடும் பணியை கல்ப் லிங்க்நிறுவனம் கைவிட வேண்டும், இராக்கில் இருந்து வெளிறே வேண்டும், பலூஜா நகரில் அமெரிக்கத்தாக்குதலில் பாதிக்கப்பட்ட 250 குடும்பத்தினருக்கும் நஷ்டஈடு வழங்க வேண்டும் ஆகியகோரிக்கைகளை தீவிரவாதிகள் முன் வைத்தனர்.
இதை ஏற்க கல்ப் லிங்க் நிறுவனம் முன் வந்தது. ஆனால், இந்தக் கோரிக்கைகள் தவிர பெரும் நிதியைதீவிரவாதிகள் கேட்பதாகத் தெரிகிறது. இதை ஏற்க அந் நிறுவனம் தயாராக இல்லை.
இந்த விஷயத்தில் துலாய்மி டபுள் கேம் ஆடுவதாகவும் அந் நிறுவனம் கருதுகிறது. இதனால், அவர்மூலமான பேச்சுவார்த்தைகளில் இருந்து விலகுவதாக கடந்த வாரம் அறிவித்தது.
தீவிரவாதிகளுடன் நேரடியாகவோ அல்லது இன்னொரு தூதர் மூலமாக பேச்சு நடத்தத் தயார் எனஅந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications