பிரதமரிடம் திமுக கூட்டணி மனு

Subscribe to Oneindia Tamil

டெல்லி - சென்னை:

வழக்கறிஞர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரக் கோரி குப்புசாமி தலைமையிலான திமுக கூட்டணி கட்சிஎம்.பிக்கள் பிரதமரிடம் இன்று மனு கொடுத்தனர்.

வழக்கறிஞர்களுக்காக கொண்டு வரப்பட்ட நடத்தை விதிமுறைகளை வாபஸ் பெறக் கோரியும், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டியை இடமாற்றம் செய்யக் கோரியும் தமிழகம் முழுவதும்வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உயர் நீதிமன்ற வளாகத்தில் ஊர்வலம் நடத்திய வழக்கறிஞர்கள் 97 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில்விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கறிஞர்கள் நேற்று முன்தினம் மீண்டும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில்ஈடுபட்டனர்.

இதையடுத்து, நீதிமன்றத்தில் நுழைவதற்கு உங்களுக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது என்பதற்கு விளக்கம்அளிக்குமாறு 102 வழக்கறிஞர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனாலும் வழக்கறிஞர்கள் தங்கள் போராட்டத்தை விலக்கிக் கொள்ளவில்லை. உயர் நீதிமன்ற கேன்டீன் முன்புஉண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந் நிலையில் வழக்கறிஞர்கள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுவடசென்னை தொகுதி திமுக எம்.பி. குப்புசாமி தலைமையில் திமுக கூட்டணிக் கட்சி எம்.பிக்கள் இன்று டெல்லியில்பிரதமர் மன்மோகன் சிங்கிடம் மனு கொடுத்தனர்.

வழக்கறிஞர்கள், போலீஸ் மோதல்:

இந் நிலையில் வழக்கறிஞர்கள் போராட்டம் இன்று 10வது நாளாக தொடர்ந்து நடந்தது.

இன்று காலையில் வழக்கறிஞர் சங்கத் தலைவர் பிரேம்நாத் தலைமையில் வழக்கறிஞர்கள் சங்க கூட்டம் நடந்தது.தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

பின்னர் உயர் நீதிமன்ற வளாகத்திலும் வெளியேயும் ஊர்வலம் சென்றனர். தலைமை நீதிபதி அறையைமுற்றுகையிட முயன்றனர். அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் அவர்களைத் தடுத்தனர். அப்போதுஇருதரப்புக்கும் ஏற்பட்ட மோதலில் வழக்கறிஞர் கருப்பனின் சட்டை கிழிந்தது. இந்த அசம்பாவிதம் நடந்தபோதுதலைமை நீதிபதி அங்கு இல்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+