ஜெவுக்கு அருகதை இல்லை என்கிறது திமுக
சென்னை:
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் நினைவு தபால் தலை வெளியீட்டு விழாதிமுக அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்டதாகவும், அது மத்திய அரசு விழா அல்ல என்றும் மத்தியசுற்றுச்சூழல்துறை அமைச்சர் ஏ.ராஜா கூறியுள்ளார்.
இந்த விழா ஒரு குடும்ப விழா என்றும், அதை அண்ணா அறிவாலயத்தில் வைத்து மத்திய அரசுநடத்தியது கடும் கண்டனத்துக்குரியது என்றும் முதல்வர் ஜெயலலிதா காட்டமான அறிக்கைவெளியிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்து ராஜா மூலம் திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அழைப்பிதழ்களிலேயே திமுக அறக்கட்டளை சார்பில் விழாவுக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதையும், அந்த நிகழ்ச்சியில் தபால் தலை வெளியீடும் நடக்கிறது என்பதும்தெள்ளத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நினைவு தபால் தலைகள் வெளியிடும் நிகழ்ச்சிகள் எப்போதுமே அந்த நபரைச் சார்ந்த குடும்பத்தினர்அல்லது அமைப்புகள் சார்பில் தான் நடத்தப்படும்.
இந்த விவரம் கூடத் தெரியாதவர் ஒரு முதல்வராக இருக்கிறார். மாறனுக்கு தபால் தலைவெளியிட்டதைக் கண்டித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை முழுக்க முழுக்க அவரது சொந்தவெறுப்பையே பிரதிபலிக்கிறது.
மாறனின் நினைவு தபால் தலை வெளியீட்டு நிகழ்ச்சியால் தபால்துறைக்கோ, மத்திய அரசுக்கோஎந்தச் செலவையும் நாங்கள் வைக்கவில்லை. விழா அழைப்பிதழில் தொடங்கி, நிகழ்ச்சிக்கானசெலவுகள் வரை எல்லா செலவும் திமுக அறக்கட்டளையால் செய்யப்பட்டவை.
மறைந்த மாறன் இந்த நாட்டுக்கு என்ன செய்தார் என்று கேள்வி கேட்க ஜெயலலிதாவைப்போன்றவர்களுக்கு அருகதையே கிடையாது என்று கூறியுள்ளார் ராஜா.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications