ஜெயலட்சுமிக்கு 50 போலீசாருடன் தொடர்பு !!
மதுரை:
ஜெயலட்சுமியுடன் 50க்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள் தொடர்பு வைத்திருந்ததை வாக்குமூலத்தில்குறிப்பிடுவோம் என்று அவரது வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.
காவல்துறையைக் கலக்கி வரும் சிவகாசி ஜெயலட்சுமி, நீதிபதிகள் பாலசுப்பிரமணியன், மாசிலாமணி ஆகியோர்கொண்ட மதுரை உயர் நீதிமன்ற பெஞ்சு முன் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.
அப்போது ஜெயலட்சுமியின் வழக்கறிஞர் அழகர்சாமி கூறியதாவது:
வாக்குமூலம் விஷயமாக ஜெயலட்சுமியிடம் நாங்கள் பேசும்போதெல்லாம் போலீசார் உடன் இருந்தார்கள்.அவர்களை வைத்துக்கொண்டு எங்களால் வாக்குமூலம் தயார் செய்ய முடியவில்லை. எனவே எங்களுக்குக் கூடுதல்கால அவகாசம் வேண்டும். மேலும் நாங்கள் ஜெயலட்சுமியிடம் விசாரிக்கச் செல்லும்போது அவருடன் போலீசார்இருக்கக்கூடாது என்றார்.
இதையடுத்து வாக்குமூலம் சமர்பிக்க வரும் திங்கள்கிழமை வரை கால அவகாசம் அளிப்பதாக நீதிபதிகள்அறிவித்தனர்.
பின்னர் ஜெயலட்சுமியை போலீசார் சொக்கிகுளத்தில் உள்ள மகளிர் காப்பகத்திற்கு மீண்டும் கொண்டு சென்றனர்.
நீதிமன்ற வளாகத்தில் ஜெயலட்சுமியின் வழக்கறிஞர்கள் அழகர்சாமி, வெங்கடேசன் ஆகியோர்செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஜெயலட்சுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, தவறான வழிமுறைகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.திங்கள்கிழமை ஜெயலட்சுமி தரப்பில் நாங்கள் தாக்கல் செய்யவிருக்கும் வாக்குமூலத்தில், அவருடன் 50க்கும்மேற்பட்ட காவல்துறையினர் தொடர்பு வைத்திருந்ததை பெயர் விவரத்துடன் தெரியப்படுத்துவோம்.
அதில் 30 போலீஸ் இன்ஸ்பெக்டர்களும், போலீஸ் உயர் அதிகாரிகளும் உண்டு. போலீஸ்காரர் ஒருவர்ஜெயலட்சுமிக்கு கார் டிரைவராகவே இருந்திருக்கிறார். திங்கள்கிழமை நிச்சயம் வாக்குமூலத்தைத் தாக்கல்செய்வோம். மேலும் அவகாசம் கேட்க மாட்டோம் என்றனர்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications