பெட்ரோல், டீசல், கேஸ் மீது வரிகள் குறைப்பு
டெல்லி:
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான சுங்க வரியையும் (கஸ்டம்ஸ் வரி) கலால் வரியையும் (எக்ஸைஸ்வரி) மத்திய அரசு குறைத்துள்ளது. இதன்மூலம் இவற்றின் விலை உயர்வை கட்டுப்படுத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது.
இப்போது பெட்ரோல், டீசல் மீது 20 சதவீத கஸ்டம்ஸ் வரி விதிக்கப்படுகிறது. இது 15 சதவீதமாகக்குறைக்கப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் மீதான வரி 10 சதவீதத்தில் இருந்து5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
அதே போல பெட்ரோல் மீதான எக்ஸைஸ் வரி 26 சதவீதத்தில் இருந்து 23 சதவீதமாகவும், டீசல்மீதான வரி 11 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாகவும், மண்ணெண்ணெய் மீதான வரி 16சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
பண வீக்கம் 7.6 சதவீதத்தைத் தொட்டுள்ளதாலும், உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலைதொடர்ந்து உயர்ந்து வருவதாலும் நாட்டில் பெட்ரோல், டீசலின் விலையை கடுமையாக உயர்த்தவேண்டிய நிலைக்கு மத்திய அரசு தள்ளப்பட்டுள்ளது.
இதற்கு மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டு வருவதால் விலை உயர்வை கட்டுப்பாட்டில் வைக்கஇந்த வரிக் குறைப்பை அரசு அமலாக்கியுள்ளது.
இந்த வரிகள் குறைப்பால் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 5,350 கோடி இழப்பு ஏற்படும் என்றுதெரிகிறது.
உலகிலேயே எரிபொருள்கள் மீது மிக அதிகமாக வரி விதிக்கும் நாடுகளில் இந்தியா முன்னணியில்இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications