நாடு முழுவதும் லாரிகள் வேலை நிறுத்தம்
சென்னை:
மத்திய பட்ஜெட்டில் லாரிகள் மீது 10 சதவீத சேவை வரி விதிக்கப்பட்டதைக் கண்டித்து, நாடுமுழுவதும் நேற்று நள்ளிரவு முதல் லாரிகள் வேலை நிறுத்தம் தொடங்கியது. இதில் தமிழக லாரிஉரிமையாளர்களில் ஒரு பிரிவினரும், டெம்போ, வேன் உரிமையாளர்களின் ஒரு பிரிவினரும்பங்கேற்றுள்ளனர்.
தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்குச் செல்லும் லாரிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுவிட்டன.இந்த வேலை நிறுத்தத்தில் இருந்து அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களைஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு விலக்கு அளிக்கவும் அகில இந்திய லாரி உரிமையாளர்கள் சங்கம்மறுப்பு தெரிவித்துவிட்டது.
ஆனால், நாங்கள் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என தமிழக லாரி உரிமையாளர்கள் சங்கம்அறித்துள்ளது. இந்த அமைப்பைச் சேர்ந்த உரிமையாளர்களின் லாரிகள் மட்டும் தமிழகத்துக்குள்இயங்குகின்றன.
ஆனால், இந்தப் போராட்டத்தில் தமிழக மோட்டார் காங்கிரஸைச் சேர்ந்த லாரி உரிமையாளர்கள்முழு அளவில் பங்கேற்றுள்ளனர். இவர்களது லாரிகள் தமிழகத்திற்குள்ளும் இயங்கவில்லை.ஆனால், தென் மாவட்டங்களில் இந்த அமைப்பு பலமாக இல்லாததால் அங்கு லாரிப் போக்குவரத்துஓரளவுக்கே பாதிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், போராட்டத்தில் பங்கேற்காத தமிழக லாரிகள் வெளி மாநிலங்களுக்குச் சென்றால்தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்பதால் அவை நேற்று நள்ளிரவோடு மாநில எல்லைப்பகுதிகளிலேயே நிறுத்தப்பட்டுவிட்டன.
இந்தப் போராட்டம் தொடர்ந்தால் வெளி மாநிலங்களில் இருந்து வர வேண்டிய பெட்ரோல், டீசல்,சமையல் கேஸ் வரத்தும், அத்தியாவசியப் பொருள்களின் வருகையும் பாதிக்கப்படக்கூடும்.
அதே போல மாநிலத்துக்குள்ளும் ஒரு பிரிவு லாரிகள் இயங்காததால் காய்கறிகளின் வரத்தும்பாதிக்கப்படலாம். இதனால் இவற்றின் விலை உயரலாம் என்று அஞ்சப்படுகிறது.
வெளி மாநில லாரிகளின் வருகை நின்று போய்விட்டதாலும், தமிழகத்தில் ஒரு பிரிவு லாரிகள்இயங்காததாலும் தமிழகத்தில் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து கணிசமான அளவுகுறைந்துள்ளது.
மாநிலம் முழுவதும் பாதிக்கும் மேற்பட்ட லாரி புக்கிங் அலுவலகங்கள் மூடப்பட்டுவிட்டன.தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு தீப் பெட்டிகள், காய்கறிகள், உணவு தானியங்கள்,பட்டாசுகளை ஏற்றிச் செல்லும் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுவிட்டன.
நாடு முழுவதும் நடக்கும் இந்தப் போராட்டத்தில் 40 லட்சம் லாரிகள் பங்கேற்றிருப்பதுகுறிப்பிடத்தக்கது.
டிரெயிலர் லாரிகள் போராட்டத்தில் குதித்துள்ளதால் துறைமுகங்களில் சரக்குகளை ஏற்றி, இறக்கும்பணி ஸ்தம்பித்துப் போயுள்ளது.
இதற்கிடையே இன்று நிருபர்களிடம் பேசிய லாரி மோட்டார் காங்கிரஸ் தலைவர் சுகுமார்,தமிழகத்தில் 90 சதவீத லாரிகள் இயங்கவில்லை. இதனால் அரசுக்கு ஒரு நாளைக்கு ரூ. 6 கோடிஇழப்பு ஏற்படும் என்றார்.
சரக்கு வேன் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் துரை கூறுகையில், மாநிலத்தில் உள்ள 83,000 சரக்குவேன்களில் பெரும்பாலான வேன்கள் இயங்குகின்றன, நாங்கள் போராட்டத்தில் பங்கேற்கவில்லைஎன்றார்.
ஆனால், மோட்டார் காங்கிரஸ் சங்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள பெரும்பாலான வேன்கள்ஓடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே அரசின் கோரிக்கையை ஏற்று காய்கறிகள், பால், தண்ணீர் போன்ற அத்தியாவசியப்பொருள்களை ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
டி.ஆர். பாலு பேட்டி:
இந் நிலையில் மத்திய தரை வழிப் போக்குவரத்துத்துறை அமைச்சர் டி.ஆர். பாலுஉளுந்தூர்பேட்டையில் நிருபர்களிடம் பேசுகையில்,
இந்த வேலை நிறுத்தம் நியாயமற்றது. நாட்டில் மூன்றில் ஒரு பங்கு லாரி உரிமையாளர்கள் இந்தப்போராட்டத்தில் பங்கேற்கவில்லை. லாரிகளை இயக்குவோரை தடுக்கும் நபர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும். எஸ்மா சட்டத்தை பிரயோகிக்கவும் தயங்க மாட்டோம் என்றார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications