தொடரும் லாரி வேலை நிறுத்தம்: பேச்சு தோல்வி
சென்னை - டெல்லி:
தேசம் தழுவிய லாரிகள் வேலை நிறுத்தம் இன்று மூன்றாவது நாளை எட்டியது. இதையடுத்து லாரிஉரிமையாளர்களுடன் இன்று மத்திய நிதியமைச்சகம் மீண்டும் பேச்சு நடத்தியது. ஆனால், அதில்சமரசம் ஏதும் ஏற்படவில்லை.
இது குறித்து நிருபர்களிடம் பேசிய நிதியமைச்சர் ப.சிதம்பரம்,
லாரிகளுக்கு சேவை வரியை அரசு விதிக்கவே இல்லை. சரக்குப் போக்குவரத்துக்கான புக்கிங்ஏஜென்டுகளுக்குத் தான் சேவை வரி விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த ஏஜென்டுகள் சங்கத்தினர்தங்கள் சுயநலம் காரணமாக, லாரி உரிமையாளர்களுக்குத் தவறான தகவல் தந்து போராட்டத்தில்குதிக்க வைத்துள்ளனர்.
அவர்களை நம்பி போராட்டத்தில் குதித்து லாரி உரிமையாளர்கள் தங்களுக்கும், நாட்டுக்கும்நஷ்டத்தை ஏற்படுத்தி வருகின்றனர் என்றார்.
இந் நிலையில் மத்திய அரசுடன் தாங்கள் இன்று நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு ஏதும்எட்டப்படவில்லை என அகில இந்திய மோட்டார் போக்குவரத்துக் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
தமிழகம் உள்பட நாடு முழுவதும் இதுவரை அத்தியாவசியப் பொருள்களின் சப்ளைபாதிக்கப்படவில்லை என்றாலும், ஆங்காங்கே, காய்கறிகள், பழங்களின் விலை உயரஆரம்பித்துள்ளது.
இந்த வேலை நிறுத்தத்தால் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் பகுதிகளில் இருந்து பிறமாநிலங்களுக்கு ஜவுளிகளை அனுப்பும் பணியும், நாமக்கல், சேலம் பகுதிகளில் இருந்துமுட்டைகளை அனுப்பும் பணியும், சிவகாசி, விருதுநகர் பகுதிகளில் இருந்து தீப்பெட்டிகள்,வெடிகளை அனுப்பும் பணியும் ஒட்டுமொத்தமாக முடங்கிப் போய்விட்டது.
அதே போல ஒசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மோட்டார் சைக்கிள்கள், வாகன இயந்திரங்கள்,உதிரிப் பாகங்களை வட மாநிலங்களுக்கு அனுப்புவதும் முடங்கியுள்ளது.
உடனடியாக ஜவுளிகளை ரயில் மூலம் பிற மாநிலங்களுக்கு அனுப்ப ரயில்வேதுறை உதவியுடன்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்துக்குள் பெரும்பாலான லாரிகள் வழக்கம்போல் ஓடிக் கொண்டுள்ளன. ஆனால், வெளிமாநில லாரிகள் வருவது நின்றுபோய்விட்டது.
-
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே!












Click it and Unblock the Notifications