ஆவணங்களை பெற சென்னையில் பெங்களூர் அதிகாரிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பான ஆவணங்கள், பொருட்கள் இன்று பெங்களூர்எடுத்துச் செல்லப்படும் என்று தெரிகிறது.

உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த ஆவணங்களைப் பெற்றுச் செல்ல பெங்களூர் நீதிமன்றஅதிகாரிகள் குழு சென்னை வந்துள்ளது.

-முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை சென்னை தனி நீதிமன்றத்தில் விசா-ரிக்க எதிர்ப்புதெ-ரிவித்தும், வேறு மா-நிலத்திற்கு இந்த வழக்கை மாற்றக் கோ-ரியும் தி-முக பொதுச் செயலாளர் அன்பழகன்உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அந்த வழக்கை விசா-ரித்த உச்சநீதிமன்றம், பெங்களூருக்கு ஜெயலலிதா வழக்கை மாற்றி உத்தரவிட்டது.பெங்களூ-ரில் தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் -முடிந்துள்ளன. ஆனால், இந்த வழக்குத்தொடர்பான ஆவணங்களை கர்நாடகத்திடம் ஒப்படைக்காமல் தமிழக அரசு இழுத்தடித்து வந்தது.

இதையடுத்து வரும் திங்கள்கிழமைக்குள் வழக்கு தொடர்பான ஆவணங்கள், முதல்வர் ஜெயலலிதா, சசிகலாவிடம்இருந்து கைப்பற்றப்பட்ட நகைகள், பொருட்களை பெங்களூர் நீதிமன்றத்திடம் ஒப்படைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தமிழக தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷுக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும் பெங்களூர் நீதிமன்ற அதிகாரிகளே நேரில் சென்னை சென்று இந்த ஆவணங்களை சரி பார்த்து எடுத்துவர வேண்டும் என்றும் கூறியுள்ளது.

இதையடுத்து பெங்களூர் உயர் நீதிமன்றப் பதிவாளர் வெங்கடேஷ், கர்நாடக சட்டத்துறை கூடுதல் செயலாளர்பாலகிருஷ்ணா, சார்பு செயலாளர் வேதமூர்த்தி ஆகியோர் தலைமையில் ஒரு குழு சென்னை வந்தது.

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்து அவரை விடுதலை செய்த தனி நீதிமன்ற நீதிபதியானமதிவாணனுடன் வழக்கு தொடர்பாக அவர்கள் ஆலோசனை -நடத்தினர்.

அப்போது சொத்துக் குவிப்பு தொடர்பாக மொத்தம் 2,451 ஆவணங்களும், 1,606 பொருட்களும் இருப்பதாகத்தெரிவித்த மதிவாணன் அவற்றின் பட்டியலைத் தந்தார். இதையடுத்து அந்த ஆவணங்களையும் பொருட்களையும்கர்நடாக குழுவினர் பார்வையிட்டனர்.

இன்று இந்த ஆவணங்களை அவர்கள் பெங்களூருக்கு எடுத்துச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆவணங்கள் பெங்களூர் எடுத்துச் செல்ல தமிழக அரசும் கர்நாடக அரசும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+