ஆபாச பாடல்கள்: நீதிமன்றம் நோட்டீஸ்
சென்னை:
தமிழ் சினிமாவில் ஆபாசமான வார்த்தைகளுடனும், மோசமான நடன அசைவுகளுடனும் பாடல்கள் வருவதைஎதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்குமாறு சென்சார் போர்டுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்அனுப்பியுள்ளது.
சென்னை தியாகராயர் நகரில் உள்ள ஜெயின் பள்ளி முதல்வர் சீதா ரஞ்சித் என்பவர் தாக்கல் செய்த மனுவில்கூறியிருப்பதாவது:
சாமி படத்தில் வரும் கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா? ஓடிப்போயி கல்யாணந்தான் கட்டிக்கலாமா,ஜேஜே படத்தில் வரும் மே மாதம் 98ல் மேஜரானேனே ஆகிய பாடல்கள் மிக ஆபாசமாக இருந்தன. பாடல்களில்மகா ஆபாசமாக உடை அணிந்து ஆடுகிறார்கள்.
இது நம் கலாச்சாரத்தை பாதிப்பதோடு, இளைஞர்கள், மாணவ, மாணவியர்களின் மனதை பாதிக்கிறது. இதனால்பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். இந்தப் பாடல்களுக்கு தணிக்கைக் குழு எப்படி சான்றிதழ் அளித்ததுஎன்பது ஆச்சரியமாக உள்ளது.
அந்தப் பாடல்களை படத்தில் இருந்து நீக்க வேண்டும். அவற்றைத் திரையிடவும், ஒலிபரப்பவும் தடை விதிக்கவேண்டும். அந்தப் பாடல்களை எழுதிய பாடலாசிரியர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இத்தகைய பாடல்கள் வருங்காலங்களில் இடம் பெறாமல் தடுக்க தணிக்கைக் குழுவில் ஆசிரியர்களைஉறுப்பினராக சேர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த மனு இன்று தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி கற்பக விநாயகம் ஆகியோர் முன் விசாரணைக்குவந்தது. மனுவை பரிசீலித்த நீதிபதிகள், இதற்கு 2 வாரத்தில் பதில் அளிக்குமாறு தணிக்கை குழு அதிகாரிக்கும்,மத்திய அரசு செய்தித் துறை செயலாளருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
-
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications