காவிரி: கர்நாடகத்தின் மாஸ்டர் பிளான்
பெங்களூர்:
காவிரி நடுவர் மன்ற நீதிபதிகளை மாற்றக் கோரி வழக்குத் தொடர்ந்து, அதன் இறுதித் தீர்ப்பைத்தாமதப்படுத்ததும் தந்திரத்தில் ஈடுபட கர்நாடகம் திட்டமிட்டுள்ளது.
இன்று அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டிய கர்நாடக அரசு, நடுவர் மன்றம் குறித்த தனதுநிலையை விரைவில் உச்ச நீதிமன்றத்திடம் தெரிவிக்கப் போவதாகக் கூறியுள்ளது.
காவிரி விவகாரத்தில் இறுதித் தீர்ப்பை விரைவில் வெளியிட முடிவு செய்த, நடுவர் மன்றக் உறுப்பினர்கள் இருவர்காவிரிப் பாசனப் பகுதிகளை நேரில் பார்வையிட முடிவு செய்திருந்தனர். இதற்கு நடுவர் மன்றத் தலைவர்அனுமதி அளிக்கவில்லை. ஆனால், அதையும் மீறி ஆய்வுப் பணி மேற்கொள்ள அவர் திட்டமிட்டிருந்தனர்.
இந் நிலையில் இந்த இரு உறுப்பினர்களின் காவிரி டெல்டா பயணத்தை எதிர்த்து பெங்களூரைச் சேர்ந்த காந்திசாகித்ய சங்க அறக்கட்டளை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
தனது மனுவில், நடுவர் மன்ற உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால் உறுப்பினர்களை மாற்றவேண்டும், புதிய உறுப்பினர்களை நியமிக்க வேண்டும். கடந்த 15 ஆண்டுகளாக நடுவர் மன்றம் செயல்பட்டுவருகிறது என்றாலும், அதன் இறுதித் தீர்ப்பு இன்னும் வெளிவரவில்லை என்று சாகித்ய சங்கம் குறிப்பிட்டிருந்தது.
இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், நடுவர் மன்ற நீதிபதிகளின் காவிரி டெல்டா பயணத்துக்குத் தடை விதித்தது.மேலும் இது தொடர்பாக ஒரு வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு தமிழகம், கர்நாடக மாநிலங்களுக்குஉத்தரவிட்டது.
இந் நிலையில் நடுவர் மன்ற பிரச்சினை குறித்து உச்ச நீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல் செய்வது குறித்துஆலோசனை நடத்த இன்று அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கர்நாடக அரசு கூட்டியுள்ளது.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று கூறப்படும் நிலையில், அதைத்தாமதப்படுத்தும் நோக்கில் நடுவர் மன்ற உறுப்பினர்களை மாற்ற வேண்டும் என்று கோர கர்நாடக அரசு முடிவுசெய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்துக்கு ஆண்டுதோறும் 205 டிஎம்சி நீர் வழங்க வேண்டும் என்ற, இந்த நடுவர் மன்றத்தில்இடைக்காலத் தீர்ப்பையே கர்நாடகம் இன்னும் அமல்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications