மாஞ்சோலை வழக்கு: கிருஷ்ணசாமி விடுதலை
திருநெல்வேலி:
திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை எஸ்டேட் தோட்டத் தொழிலாளி அந்தோணி முத்து கொலை வழக்கில்,புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட 3 பேர் விடுதலை செய்யப்பட்டனர். 8 பேருக்குஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அந்தோணி முத்து கடந்த 1998ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை டாக்டர் கிருஷ்ணசாமி,பாதிரியார் பால் ரத்தினசாமி, கிருஷ்ணகாந்த் யாதவ் உள்ளிட்ட 11 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு திருநெல்வேலி முதலாவது விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இன்று அதில் தீர்ப்புவழங்கப்பட்டது.
இதில் கிருஷ்ணசாமி, பாதிரியார் பால் ரத்தினசாமி, கிருஷ்ணகாந்த் யாதவ் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுக்கள்நிரூபிக்கப்படாததால் அவர்களை விடுதலை செய்தவதாக நீதிபதி ரஹ்மத்துல்லா அறிவித்தார்.
மற்ற 8 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ. 8,000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி டாக்டர் கிருஷ்ணசாமி நீதிமன்றத்தில் ஆஜரானார். சமீபத்தில் அவர் மீது குண்டுவீசித் தாக்குதல் நடந்ததால் நீதிமன்ற வளாகத்தில் ஏராளமான ஆயுதம் தாங்கிய போலீஸார் பாதுகாப்புப் பணியில்ஈடுபட்டிருந்தனர்.
இந்த மாஞ்சோலை தோட்டத் தொழிலாளிகள் தொடர்பாக நெல்லையில் கிருஷ்ணசாமி நடத்திய ஊர்வலத்தில்போலீசார் தடிதடி நடத்தியபோது, பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பலர் தாமிரபரணி ஆற்றில் குதித்துத் தப்பமுயன்று அதில் மூழ்கி இறந்தது குறிப்பிடத்தக்கது.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications