வங்கம் நோக்கி: சன் டிவியின் பெங்காலி சேனல் !
சென்னை:
தென் மாநிலங்கள் முழுவதிலும் தனித்தனி சேனல்களை ஆரம்பித்துவிட்ட சன் டிவி அடுத்தபடியாக வங்காளத்தில்காலடி எடுத்து வைக்கிறது.
பெங்காலி மொழியில் சுர்ஜயா டிவி என்ற புதிய சேனலை தொடங்கவுள்ளது.
இந்தியாவின் முன்னணி தனியார் செயற்கைக்கோள் தொலைக்காட்சி நிறுவனமாக விளங்கும் சன் டிவி குழுமம்தற்போது தமிழில் சன் டிவி, தெலுங்கில் ஜெமினி, கன்னடத்தில் உதயா, மலையாளத்தில் சூர்யா என நான்கு மொழிசேனல்களை வழங்கி வருகிறது.
இதுதவிர தமிழில் சன் நியூஸ், கே டிவி, கன்னடத்தில் உஷே, தெலுங்கில் தேஜா ஆகிய சேனல்களையும் நடத்திவருகிறது. இந் நிலையில் பெங்காலி மொழியில் புதிய சானலைத் தொடங்கவுள்ளது சன்.
சுர்ஜயா டிவி என்று இதற்குப் பெயரிட்டுள்ளனர். இதுகுறித்து சன் டிவி குழும தலைவர் கலாநிதி மாறன்கூறுகையில், இந்தி மொழியை விட வர்த்தக ரீதியிலும், கலாச்சார ரீதியிலும் முக்கியத்துவம் வாய்ந்தது பெங்காலிமொழி. இதன் காரணமாகவே பெங்காலி மொழியில் அடுத்த சேனலை தொடங்கவுள்ளோம்.
பெங்காலி மொழியில் ஏற்கனவே ஈடிவி பங்களா, தாரா பங்களா, ஆல்பா பங்களா, ஆகாஷ் பங்களா என்றுநான்கு சேனல்கள் உள்ளன. எனவே பெங்காலி மொழியில் கடும் சவாலை நாங்கள் சந்திக்க வேண்டியிருக்கும்.இருப்பினும் தென்னக சேனல்களில் புகழ் பெற்ற தொலைக்காட்சித் தொடர்களை பெங்காலி மொழிக்கு கொண்டுசெல்வதன் மூலம் போட்டியை சமாளிக்க முடியும் என்று நினைக்கிறோம் என்றார்.
ஆங்கில நாளிதழ் ஆரம்பிக்கும் திட்டத்தையும் வைத்திருக்கிறார் கலாநிதி என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications