வைகோ விஷயத்தில் ஜெ. மர்ம நாடகம்: கருணாநிதி
சென்னை:
வைகோ மீதான பொடா வழக்கை வாபஸ் பெற அனுமதிக்க முடியாது என்று பூந்தமல்லிசிறப்பு நீதிமன்றம்தீர்ப்பளித்துள்ளதன் மூலம், தமிழக அரசின் மர்ம நாடகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்று திமுக தலைவர்கருணாநிதி கூறியுள்ளார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசுசிய கருணாநிதி கூறியதாவது:
மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கு பதவிக்கு வந்ததும் பொடா சட்டத்தை வாபஸ் பெறும்நடவடிக்கைகள் தொடங்கி விட்டன. ஆனால் பாஜக கூட்டணியினர் நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் அமளிசெய்து, நாடாளுமன்றத்தை முடக்கியதால் பொடா வாபஸ் சட்டத்தைக் கொண்டு வர முடியாமல் போய் விட்டது.
வைகோ மீதான பொடா வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று பொடா மறு ஆய்வுக் குழு தமிழக அரசுக்குஉத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 9ம் தேதி வைகோ மீதான வழக்குகளை வாபஸ் பெறுவதாக தமிழகஅரசு பொடா நீதிமன்றத்தில் மனு செய்தது.
ஆனால் பொடா சட்டத்தை வாபஸ் பெறக் கூடாது என்று கூறி மத்திய அரசுக்கு எதிர்ப்பைத் தெரிவிக்குமாறு கூறிஅனைத்து மாநில முதல்வர்களுக்கும் ஜெயலலிதா கடிதம் எழுதினார். மேலும், பொடா சட்டத்தை வாபஸ் பெறக்கூடாது என்று பகிரங்கமாகவும் எதிர்ப்பு தெரிவித்தார்.
வஞ்சம் தீர்க்கும் முறையில் ஆட்சி நடத்தும் ஜெயலலிதாவின் ஆட்சியில் வாய்மைக்கும், அதற்கேற்ற வலுவானவாதத்திற்கும் ஒரு துளி கூட இடமில்லை என்பதை தற்போது பொடா நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவின் மூலம்தெரிய வந்துள்ளது.
மேலம், ஜெயலலிதாவின் பேச்சும், நடவடிக்கையும் மர்மம் நிறைந்தது என்று நான் கூறியது உண்மையாகிஇப்போது அவரது மர்ம நாடகம் வெளிச்சத்திற்கு வந்து விட்டது என்றார் கருணாநிதி.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications