காவிரி: கர்நாடக மனுவுக்கு தமிழகம் பதில்
டெல்லி:
காவிரி நடுவர் மன்றத்தை மாற்றி அமைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மனுத் தாக்கல் செய்தது.இதை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
காவிரி நதி நீர்ப் பிரச்சினையைத் தீர்த்து வைக்க 1990ம் ஆண்டு நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது.
பிரச்சினை குறித்து நடுவர் மன்றம் விசாரணை நடத்தி இடைக்கால தீர்ப்பு வழங்கியது. விரைவில் இறுதித் தீர்ப்பும்வெளியாக இருக்கிறது.
இந் நிலையில், காந்தி சாகித்ய சங்க அறக்கட்டளை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனுவில், காவிரி நடுவர் மன்ற தலைவருக்குத் தெரியாமல், நடுவர் மன்ற உறுப்பினர்கள் நீர்படுகைபகுதிகளை பார்வையிட்டுச் சென்றுள்ளனர். இது முறையற்றது. எனவே நடுவர் மன்றத்தைக் கலைக்க வேண்டும்என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், தமிழ்நாடு, கர்நாடக அரசுகளுக்கு நோட்டீஸ்அனுப்பியது. இதற்கு பதில் அளித்து கர் நாடக அரசு ஒரு மனுத் தாக்கல் செய்தது.
அதில் கூறப்பட்டிருப்பதாவது:
காவிரி நடுவர் மன்ற தலைவருக்கும், அதன் இரு உறுப்பினர்களுக்கும் இடையே ஒற்றுமையும், ஒருங்கிணைந்தசெயல்பாடும் இல்லை. இதனால் காவிரி நடுவர் மன்றம் முழுமையாக செயலற்றுப் போய் விட்டது. எனவேநடுவர்மன்றத்தை மாற்றி அமைப்பதே இதற்கு பரிகாரமாக அமையும். ஆதலால் நடுவர் மன்றத்தை மாற்றிஅமைப்பதை கர்நாடக அரசு ஆதரிக்கிறது என்று அந்த மனுவில் கூறப் பட்டுள்ளது.
இதற்கு தமிழக அரசு தனது மனுவில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்த மனுவில்,
இது காவிரி நடுவர் மன்றத்தை முடக்கிப் போடும் திட்டம் ஆகும். நடுவர் மன்றத்தை மாற்றி அமைப்பதன் மூலம்இறுதி தீர்ப்பை தாமதப்படுத்த கர்நாடக அரசு முயல்கிறது. எனவே அந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்என்று கூறப்பட்டுள்ளது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம்












Click it and Unblock the Notifications