ஜெயலட்சுமி: கைதான டிரைவரின் திருமணம் பாதிப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர் & மதுரை:
ஜெயலட்சுமி குடும்பத்தினரைக் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட கார் டிரைவருக்கு நாளை திருமணம்நிச்சயிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் மறுத்துள்ளது.
ஜெயலட்சுமியின் குடும்பத்தினரைக் கடத்திய வழக்கில் சப் இன்ஸ்பெக்டர் ஷாஜகான், ஏட்டு கண்ணன்,நகைக்கடை உரிமையாளர் முருகவேல், டிரைவர் அழகர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
தற்போது சிறையில் இருக்கும் அழகருக்கு நாளை, மதுரை மாவட்டம் பேரையூரில் திருமணம் நடக்கவிருக்கிறது.எனவே அவருக்கு ஜாமீன் வழங்கும்படி ஸ்ரீவில்லிபுத்தூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான இன்ஸ்பெக்டர் இளங்கோவன் உட்பட 3 பேர் இன்னும் கைதுசெய்யப்படாததால், இவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று அரசு வழக்கறிஞர் முத்துப் பாண்டியன் ஜாமீன்மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதை ஏற்ற நீதிபதி துரைசாமி, அழகரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துஉத்தரவிட்டார்.
இதனால் இத் திருமணம் நிறுத்தப்படும் என்று தெரிகிறது.
கண்ணன், ஷாஜகான் ஜாமீன் மனு:
இதற்கிடையே எஸ்.ஐ. ஷாஜகான், ஏட்டு கண்ணன் ஆகியோர் சார்பில் அவர்களது வழக்கறிஞர்கள் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
ஜெயலட்சுமியின் தந்தை அழகிரிசாமி, தனது மனைவி திருவேங்கட தாயார், மகன் சீனிவாசன், பேத்தி அபிநயா,பேரன் கோகுல் ஆகியோரை ஏட்டு கண்ணன் உட்பட சிலர் கடத்தி சென்றுவிட்டதாக மாரனேரி போலீசில் புகார்செய்தார்.
ஆனால் மாரனேரி போலீசாரிடம் அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தில் தங்களை யாரும் கடத்தவில்லை என்றும்ஜெயலட்சுமி வீட்டில் தங்கி இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம்நடந்த போது அழகிரிசாமி தனது வீட்டில் இல்லை.
இளங்கோவனின் மைத்துனர் முருகவேலுக்கு ஜெயலட்சுமி தர வேண்டிய பணத்தை கொடுக்காமல் இருப்பதற்காகத்தான் அழகிரிசாமி பொய்ப் புகார் அளித்துள்ளார். எனவே கண்ணனையும், ஷாஜகானையும் ஜாமீனில் விடுவிக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications