போலீஸ் மீது செக்ஸ் புகார்: சேலத்திலும் ஒரு ஜெயலட்சுமி
சேலம்:
சிவகாசி ஜெயலட்சமியைப் போன்றே போலீஸ் அதிகாரி மீது செக்ஸ் புகார் கூறிய சேலத்தைச் சேர்ந்த ஜெயலட்சுமிஎன்ற பெண்ணை போலீஸார் தேடி வருகின்றனர்.
சேலம் அன்னதானப்பட்டி பகுதியில் விபசார தொழிலில் பிரபலமாக விளங்கி வந்தவர் புரோக்கர் கருப்பண்ணன்என்கிற கருப்புசாமி. இவர் சில மாதங்களுக்கு முன் இறந்து விட்டார். அன்னதானப்பட்டி பகுதியில் ஒரு வாடகைவீட்டில் பல பெண்களை வைத்து கருப்புசாமி விபசார தொழில் செய்து வந்தார்.
அவரிடம் 13 வயது சிறுமியாக வந்து சேர்ந்தவர்தான் ஜெயலட்சுமி.
ஜெயலட்சுமியை வி.ஐ.பிகளுக்கும், போலீஸ் அதிகாரிகளுக்கும் மட்டும் சப்ளை செய்து வந்துள்ளார் கருப்புசாமி.இந்நிலையில், கருப்புசாமிக்கு வேண்டப்பட்ட முன்னாள் ராணுவ வீரர் மணிகண்டன், ஜெயலட்சுமியின் அழகில்சொக்கி அவரைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினார்.
இதையடுத்து மணிகண்டனுக்கு ஜெயலட்சுமியைத் திருமணம் செய்து கொடுத்தார் கருப்பசாமி.
இந் நிலையில் கேபிள் ஆபரேட்டரான மணிகண்டனுக்கும், சேலம் வீடியோ பைரஸி செல் (திருட்டு விசிடி தடுப்புப்பிரிவு) இன்ஸ்பெக்டர் நடராஜனுக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு மணிகண்டனின் மனைவிஜெயலட்சுமிக்கும், நடராஜனுக்கும் நெருக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்குப் போயுள்ளது.
இதனையடுத்து சேலம் பில்லுக்கடை பஸ் ஸ்டாப் அருகே ஜெயலட்சுமிக்கு வீடியோ கடை வைத்துக்கொடுத்துள்ளார் இன்ஸ்பெக்டர்.
இந் நிலையில் ஜெயலட்சுமிக்கும் நடராஜனுக்கும் இடையேயான நெருக்கத்தில் சிறு விரிசல் ஏற்பட, தனதுபோலீஸ் புத்தியைக் காட்டியுள்ளார் நடராஜன்.
கடந்த 1ம் தேதி வீடியோ பைரசி போலீஸார் ஜெயலட்சுமி கடையில் ரெய்ட் நடத்தி, திருட்டு சிடிக்கள், ஆபாசபடசிடிக்கள் ஆகியவற்றை அள்ளி சென்றனர்.
பின், ஜெயலட்சுமியை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, எந்த வழக்கும் பதிவு செய்யாமல் காலை முதல்இரவு வரை உட்கார வைத்து, ஆபாசமாகப் பேசி அலைக்கழித்துள்ளனர்.
இந்தத் தொல்லை பல நாட்கள் நீடிக்கவே நொந்துபோன ஜெயலட்சுமி, முதல்வர் ஜெயலலிதா மற்றும் டி.ஜி.பி.கோவிந்த் ஆகியோருக்கு புகார் அனுப்பினார். இதையடுத்து வீடியோ பைரசி செல் எஸ்.பி. அவி பிரகாஷ்,ஜெயலட்சுமியை விசாரிக்க சேலம் வந்தார்.
போலீஸார் ஜெயலட்சுமி, மணிகண்டனை விசாரணைக்கு அழைத்தபோது அவர்கள் வர மறுத்தனர். போலீஸார்சம்மனுடன் ஜெயலட்சுமி வீட்டிற்கு சென்றபோது, ஜெயலட்சுமியும், மணிகண்டனும் தலைமறைவாகி விட்டனர்.
பின்பு ஜெயலட்சுமியின் கடையில் போலீஸார் சம்மனை ஒட்டிச் சென்றனர். இந்த சம்மன் மறுநாள்கிழிக்கப்பட்டிருந்தது.
சம்மன் அளித்து ஒரு வார காலக்கெடுவிற்குள் ஜெயலட்சுமி மற்றும் மணிகண்டன் இருவரும் விசாரணை அதிகாரிமுன் ஆஜராகவில்லை என்றால், அவர்கள் மீது கைது நடவடிக்கையை எடுக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
இப்போது போலீஸார் தலைமறைவாக இருக்கும் ஜெயலட்சுமி மற்றும் மணிகண்டன் ஆகியோரை தீவிரமாக தேடிவருகின்றனர். இதற்கிடையே செக்ஸ் புகார் கூறப்பட்ட இன்ஸ்பெக்டர் நடராஜன் மருத்துவ விடுப்பில்சென்றுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications