சென்னைக்கு தண்ணீர்: கொதித்து எழுந்த கிராமம்
திருவள்ளூர்:
சென்னை நகருக்கு அதிக அளவில் தண்ணீர் கொண்டு செல்லப்படுவதை நிறுத்தக் கோரி திருவள்ளூர் மாவட்டம் வெள்ளியூர் கிராம மக்கள்பெரும் போராட்டத்தில் குதித்தனர்.
வெள்ளியூர் கிராமத்தில் உள்ள விவசாய கிணறுகளிலிருந்து ராட்சச பிவிசி குழாய்கள் மூலம் சென்னை நகருக்கு தண்ணீர் பம்ப்செய்யப்பட்டு வருகிறது. கடந்த 30 ஆண்டுகளாக இவ்வாறு தண்ணீர் எடுக்கப்படுகிறது.
இதுதவிர ஏராளமான டேங்கர் லாரிகள் மூலமும் தண்ணீர் எடுத்து வருகிறது சென்னை பெருநகர குடிநீர் வடிகால் வாரியம் (மெட்ரோவாட்டர்).
இப்படி அநியாயத்துக்கு நீர் உறிஞ்சப்படுவதால் தங்களது கிராமத்தின் நிலத்தடி நீர் வெகு அபாய கட்டத்தை அடைந்துவிட்டதாகவும்,விவசாயத்திற்குக் கூட தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறி இக் கிராம மக்கள் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி போராட்டம்நடத்தினர்.
தண்ணீர் எடுப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட வருவாய்கோட்ட அதிகாரி கிராமத்தினருடன் பேச்சு நடத்தினார். அப்போது ஒரு மாதத்திற்குள் தண்ணீர் எடுப்பது நிறுத்தப்படும் என அதிகாரிஉறுதியளித்தார்.
இந் நிலையில் ஒரு மாத கெடு முடிவடைந்த நிலையில் நேற்று வரை, தண்ணீர் எடுப்பது நிறுத்தப்படாததால் கிராமத்தினர்ஆத்திரமடைந்தனர். சுமார் 1000க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திரண்டு வந்து பிவிசி குழாய்களை அடித்து நொறுக்கினர். கிணறுகளில்போடப்பட்டிருந்த போர்வெல் இயந்திரங்களையும் பிடுங்கி எறிந்தனர்.
கிராமத்தினரின் கொந்தளிப்பால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை!












Click it and Unblock the Notifications