தமிழ்க்குடிமகன் உடல் தகனம்; ஜெ. சார்பில் மலரஞ்சலி

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரையில் மரணமடைந்த முன்னாள் சபாநாயகர் தமிழ்க்குடிமகன் உடல் மதுரை புதூரில் எரியூட்டப்பட்டது.அவரது உடலுக்கு முதல்வர் ஜெயலலிதா சார்பில் மலர் வளையம் வைக்கப்பட்டது.

முன்னாள் சபாநாயகரான தமிழ்க்குடிமகன் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். அவரது உடலுக்கு பல்வேறுஅரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இந் நிலையில் தமிழ்க்குடிமகன் மரணத்திற்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்திருந்தார். தமிழும்,தமிழர்களும் உள்ள வரையில் தமிழ்க் குடிமகன் புகழ் மறையாது என்று அவர் தெரிவித்திருந்தார்.

ஜெயலலிதா சார்பில் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் தமிழ்க்குடிமகன் உடலுக்கு மலர் வளையம்வைத்து அஞ்சலி செலுத்தினார். முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன், முன்னாள் மதுரை மேயர்குழந்தைவேலு ஆகியோரும் தமிழ்க்குடிமகனுக்கு அஞ்சலி செலுத்தினர்.

தமிழ்க்குடிமகனின் உடல் மதுரை புதூரில் உள்ள சுடுகாட்டில் எரியூட்டப்பட்டது. உடலுக்கு தமிழ்க்குடிமகனின்மகன் மெய்மொழி தீ மூட்டினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+