கன்னட திரையுலக புறக்கணிப்புக்கு ஜெ. ஆதரவு !
சென்னை:
கன்னட திரையுலகைப் புறக்கணிப்பது என்று தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை மற்றும் ஆந்திரமாநில திரைப்பட வர்த்தக சபை ஆகியவை எடுத்துள்ள முடிவுக்கு முதல்வர் ஜெயலலிதா ஆதரவுதெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் கன்னடம் அல்லாத பிற மொழிப் படங்களைத் திரையிட 7 வார தடையை அம் மாநிலதிரையுலகம் அமல்படுத்தியுள்ளது. இதற்கு தமிழ், தெலுங்கு, இந்தி திரையலகினரிடையே கடும்எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்தத் தடையைக் கண்டித்து கர்நாடகத்தில் கன்னடம் அல்லாத பிற மொழிப் படங்களைத்திரையிடும் திரையரங்குகள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்திலும் குதித்துள்ளன.
இந் நிலையில் ஆந்திர திரைப்பட வர்த்தக சபை கன்னடத் திரையுலகம் மீது கடுமையான பலதடைகளை அறிவித்து தீர்மானம் நிறைவேற்றியது.
இந்தத் தீர்மானங்களை வழிமொழிந்த சென்னையில் உள்ள தென்னிந்தியத் திரைப்பட வர்த்தகசபையும் கன்னடத் திரையுலகுக்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை என முடிவு செய்துள்ளது.
கன்னடக் கலைஞர்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை, கன்னட நடிகர், நடிகைகளுக்கு வாய்ப்புதருவதில்லை என்பது இந்த தடையின் முக்கிய அம்சங்களாகும்.
இந் நிலையில், தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகினரின் இந்தத் தடைக்கு முதல்வர் ஜெயலலிதாஆதரவு தெரிவித்துள்ளதாக, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கப் பிரமுகரான அன்பாலயாபிரபாகரன் தெரிவித்துள்ளார்.
திருட்டு விசிடி பிரச்சினை தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவை தமிழ்த் திரையுலகினர் நேற்றுசந்தித்தபோது, கன்னடத் திரையுலகினரின் போக்கு குறித்து கவலை தெரிவித்தனர்.
அதற்கு முதல்வர் ஜெயலலிதா, தமிழ்த் திரையுலகின் நன்மைக்காக நீங்கள் எடுக்கும் முடிவுக்குஆதரவாக இருப்பேன் என்று கூறியதாக அன்பாலயா பிரபாகரன் தெரிவித்தார்.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications