பாதுகாப்புடன் மதுரை திரும்பிய ஜெயலட்சுமி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையைப் பார்க்க வந்த ஜெயலட்சுமி விசாரணை செவ்வாய்க்கிழமைக்குத் தள்ளிவைக்கப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் மதுரை திரும்பினார்.
ஜெயலட்சுமியின் வழக்கை சிபிஐ விசாரிக்கக் கூடாது என்ற காவல்துறையினரின் மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்றுவிசாரிக்கப்பட்டது. இதற்காக ஜெயலட்சுமி மதுரையிலிருந்து போலீஸ் பாதுகாப்புடன் சென்னைக்கு வந்திருந்தார்.
விசாரணை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் அறிவித்ததைத் தொடர்ந்து தனது வழக்கறிஞர்களுடன்ஆட்டோவில் புறப்பட்டுச் சென்ற ஜெயலட்சுமி இரவு பஸ் மூலம் மதுரை திரும்பினார்.
பஸ்சில் சென்ற ஜெயலட்சுமிக்குப் பாதுகாப்பாக துப்பாக்கியுடன் கூடிய பெண் போலீஸாரும் சென்றனர். மதுரையில் இருந்து வரும்போதும்பலத்த பாதுகாப்புடன் அவர் அழைத்து வரப்பட்டார்.












Click it and Unblock the Notifications