உத்தராஞ்சல் விபத்து: 10 உடல்கள் சென்னை வந்தன
சென்னை:
உத்தராஞ்சல் மாநிலத்தில் மலையிலிருந்து பேருந்து விழுந்ததில் இறந்த 15 பேரில் 10 பேரின் உடல்கள் இன்றுசென்னை வந்து சேர்ந்தன.
சென்னையிலிருந்து பத்ரிநாத் புனிதப் பயணம் மேற்கொண்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்டோர்கடந்த வெள்ளிக்கிழமை 5 பேருந்துகளில் பத்ரிநாத் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது டேராடூன் அருகே மலைப் பாதையில் பஸ்கள் சென்றபோது ஒரு பஸ் மலையிலிருந்து 200அடிப்பள்ளத்தில் விழுந்தது. இதில் 15 பேர் பலியாயினர். பலர் காயமடைந்தனர்.
இறந்தவர்களில் 10 பேருடைய உடல்கள் இன்று டெல்லியிலிருந்து இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம்சென்னைக்குக் கொண்டு வரப்பட்டன. இறந்தவர்களின் உடல்களை அவர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்கப்பெற்றுக் கொண்டனர்.
பின்னர் கார்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் மூலம் சம்பந்தப்பட்டவர்களின் ஊர்களுக்கு உடல்கள் எடுத்துச்செல்லப்பட்டன. விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணியிலும், மருத்துவமனையிலும் உத்தராஞ்சல் மாநிலமக்களும், டாக்டர்களும், அரசு அதிகாரிகளும் பெரும் உதவி புரிந்ததாக விபத்திலிருந்து தப்பிய பயணிகள்நன்றியுடன் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications