மினி உலக கோப்பையை வென்றது வெஸ்ட் இண்டீஸ்
லண்டன்:
மினி உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை இரண்டு விக்கெட் வித்தியாசத்தில்வீழ்த்தி மேற்கு இந்தியத் தீவுகள் அணி கோப்பையைக் கைப்பற்றியது.
டாஸ் வென்ற பிரையன் லாரா பீல்டிங்கைத் தேர்வு செய்தார். பேட் செய்ய ஆரம்பித்த இங்கிலாந்து அணி வீரர்கள்வரிசையாக விக்கெட்களை இழந்தனர். சோலங்கி (4), மைக்கேல் வான் (7), பிளின்டாப் (3), ஜோன்ஸ் (6) எனவிக்கெட்கள் அடுத்தடுத்து சரிந்ததால் இங்கிலாந்து அணி பயங்கரமாகத் தடுமாறியது.
இருப்பினும் டிரஸ்கோதிக் அணியை சரிவிலிருந்து மீட்டார். அவர் 104 ரன்கள் எடுத்தார். இருப்பினும்மறுமுனையில் ஸ்ட்ராஸ் (18), காலிங்வுட் (16), கைல்ஸ் (31) என அடுத்தடுத்து விக்கெட்கள் விழுந்ததால் 49.4ஓவர்களில் 217 ரன்களுக்கு இங்கிலாந்து ஆட்டமிழந்தது. மேற்கு இந்தியத் தீவுகள் தரப்பில் ஹிண்ட்ஸ் 3,பிராட்ஷா 2 விக்கெட் வீழ்த்தினர்.
218 ரன்கள் என்பது எளிதான இலக்கு. லாரா தலைமையில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியினர் இதை விரைவில்எட்டிவிடுவார்கள் என்று எல்லாரும் நினைத்தனர். ஆனால் தேவையில்லாத ஷாட்களை அடித்து ஹிண்ட்ஸ் (3),சர்வான் (5), கெய்ல் (23), லாரா (14), வெய்னே பிரேவோ (0) விரைவில் வெளியேறினர். 80 ரன்களுக்கு 5விக்கெட்களைப் பறி கொடுத்து தோல்வியின் விளிம்பில் நின்றது லாரா அணி.
ஆனால் சந்தர்பால் பொறுமையாக ஆடி 47 ரன்கள் எடுத்தார். அடுத்து அவரும் அவுட்டாக இங்கிலாந்து வெற்றிபெறும் என்று நிலை ஏற்பட்டது. கடைசி நேரத்தில் பிராட்ஷா, பிரவுன் ஜோடி அதிரடியாக ஆட ஆரம்பிக்க ஆட்டம்திசை மாறியது. இறுதியில் 48.5 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட்டுக்கு 218 ரன்கள் எடுத்து 2 விக்கெட்வித்தியாசத்தில் கோப்பையை வென்றது.
மேற்கு இந்தியத் தீவுகள் அணி முதல் முறையாக மினி உலக கோப்பையை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.ஆட்டநாயகன் விருதை பிராட்ஷாவும், தொடர் நாயகன் விருதை ராம்நரேஷ் சர்வானும் பெற்றனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications