கிருஷ்ணா நீர்: ஜெ. இன்று ஹைதராபாத் பயணம்
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா இன்று ஹைதராபாத் பயணம் செய்கிறார். அவருடன் உயர்மட்ட அதிகாரிகள் குழுவும் செல்கிறது.
சென்னையில் நிலவும் கடுமையான குடிநீர்ப் பஞ்சத்தை தீர்ப்பதற்காக ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடுமாறு ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியை வலியுறுத்தி ஜெயலலிதா இரண்டு முறை கடிதம் எழுதினார்.
கடந்த 15ம் தேதியன்று தமிழக பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் நடராஜன் தலைமையிலான அதிகாரிகள் குழு கண்டலேறுஅணைக்குச் சென்று அணையின் நிலையைப் பார்வையிட்டு அம்மாநில பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியது.
இந் நிலையில் நெல்லூரில் நடந்த தேசிய நெடுஞ்சாலைத் திட்ட விழாவில் கலந்து கொண்ட மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சர்டி.ஆர்.பாலு, கிருஷ்ணா நதியிலிருந்து சென்னைக்கு குடிநீர் வழங்குமாறு கோரி ஆந்திர முதல்வரை கேட்டுக் கொள்ளுமாறு கூறி தன்னைதிமுக தலைவர் கருணாநிதி அனுப்பி வைத்துள்ளதாக குறிப்பிட்டார்.
அதற்கு, அக்டோபர் 15ம் தேதிக்குள் கிருஷ்ணா நீர் சென்னைக்கு வந்து சேரும் என்று டி.ஆர்.பாலுவுக்கு முதல்வர் ராஜசேகர ரெட்டிபதிலளித்தார்.
இந் நிலையில் ஜெயலலிதா இன்று ஹைதராபாத் செல்கிறார். இன்று மாலை தனி விமானம் மூலம் ஹைதராபாத் செல்லும் ஜெயலலிதாவுடன்,தலைமைச் செயலாளர் பொறுப்பை வகிக்கும் நிதித்துறை செயலாளர் நாராயணன், பொதுப்பணித்துறை செயலாளர் பழனியப்பன்ஆகியோரும் செல்கிறார்கள்.
நாளை ராஜசேகர ரெட்டியை சந்தித்துப் பேசும் ஜெயலலிதா, கிருஷ்ணா நதி நீரை விடுவிப்பது குறித்து பேச்சு நடத்துவார்.
பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அதிகாரிகள் சென்னைக்குத் திரும்புகிறார்கள். ஜெயலலிதா மட்டும் ஒரு வாரம் ஹைதராபாத்தில் உள்ள தனதுதிராட்சை தோட்டத்தில் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications