வக்கிரப் பார்வை ராமதாஸ்: ஜெ தாக்கு
சென்னை:
டாக்டர் ராமதாசுக்கு முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவின் அலட்சியத்தால் தான் வறட்சி நிவாரணக் குழுவினர் தமிழகத்திற்கு காலதாமதமாக வந்ததாக பா.ம.க. நிறுவனர்டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
இரண்டு மாதங்களுக்கு முன்பே பிரதமரைச் சந்தித்து மத்திய வறட்சி நிவாரணக் குழுவினரை தமிழகத்துக்கு வரச் செய்ய முதல்வர்ஜெயலலிதா தவறிவிட்டதாகவும், காலமாதமாகச் சென்று பிரதமரை ஜெயலலிதா சந்தித்ததால், இப்போது மழை பெய்துகொண்டிருக்கும்போது மத்தியக் குழுவினர் தமிழகத்துக்கு வந்துள்ளதாகவும் கும் சாட்டியிருந்தார்.
இதற்கு பதிலளித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் நிலவும் வறட்சியைப் பார்வையிட மத்தியக் குழுவினர் வந்ததும், அவர்கள் வந்த நேரத்தில் மழை பெய்வதும் கூட டாக்டர்ராமதாசின் வக்கிரப் பார்வைக்கு தவறாகவே தெரிகிறது.
மத்தியக் குழுவினர் வறட்சிப் பகுதிகளைப் பார்வையிட குடையைப் பிடித்துக் கொண்டு செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாகஅங்கலாய்க்கிறார் ராமதாஸ். எதை அவல நிலை என்கிறார் ராமதாஸ். மத்தியக் குழு வந்ததையா?, மழை பெய்வதையா?
இப்போது சில நாட்களாக மழை பெய்தால் 3 ஆண்டு கால வறட்சி இல்லை என்றாகிவிடுமா? மத்தியக் குழுவினரிடம் அரசும் பொதுமக்களும் வறட்சி நிலையை எடுத்துச் சொல்லியிருக்கிறோம். வறட்சி நிலவுவதை குழுவினரும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.
நிலைமை இப்படி இருக்க தமிழ்நாட்டில் மழை பெய்வதைக் கூட சகித்துக் கொள்ள முடியாத ராமதாசின் மனோபாவத்தை சகிக்கமுடியவில்லை.
தியேட்டர் பராமரிப்பு கட்டணம்:
அதே போல திரைப்படத்துறையினருக்கு கொடுக்கப்பட்ட சலுகைகளையும் கண்டித்து அறிக்கை விட்டிருக்கிறார் ராமதாஸ். நல்லது நடந்தால்அது பிடிக்காது, எதையும் அரைகுறையாகப் புரிந்து கொண்டு அறிக்கை விடுவது ராமதாசின் வேலையாகிவிட்டது.
முன்பு தியேட்டர்களில் பராமரிப்புக் கட்டணம் பார்வையாளர்களிடம் வசூலிக்கப்பட்டு வந்தது. தியேட்டர்களை முறையாகப் பராமரிக்க,அக் கட்டணத்தை மீண்டும் அமலாக்க அனுமதிக்கக் கோரினர் திரையுலகினர்.
அதே நேரத்தில் கேளிக்கை வரி குறைக்கப்பட்டிருப்பதால், பராமரிப்புக் கட்டணம் சேர்க்கப்பட்டாலும், இப்போதுள்ள டிக்கெட் கட்டணம்உயராது. இதனால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது.
எதையும் அரைகுறையாகப் புரிந்து கொண்டு அறிக்கை விடுவதை ராமதாஸ் நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications