For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காந்தியை போல வாழ வேண்டும்: கலாம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ஒவ்வொரு மனிதனும் மகாத்மா காந்தியைப் போல வாழ வேண்டும் என்று குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்மாணவர்களிடத்தில் கூறினார்.

சென்னைக்கு வந்த அப்துல் கலாம் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடந்தமாணவர்களின் கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 3,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். கலை நிகழ்ச்சியின் முடிவில், மாணவர்களிடம் அப்துல் கலாம்கலந்துரையாடினார்.

மாணவர்களிடம் கேள்விகள் கேட்டார், அவர்களது கேள்விகளுக்குப் பதில் அளித்தார். பின்னர் கலாம்பேசுகையில், சுதந்திரம் அடைவதற்கு முதல் நாள் 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி இரவு எங்களது ஆசிரியர்சாலமன் அய்யாத்துரை, எங்களை அழைத்து வரிசையாக நிற்க வைத்தார்.

இன்று இரவு நமக்கு சுதந்திரம் கிடைக்கப் போகிறது என்று அவர் தெரிவித்தார். பின்னர் இரவு 11.45 மணியளவில்நேருவின் சுதந்திர தின உரை வானொலியில் ஒலிபரப்பப்பட்டது. அதைக் கேட்ட எங்களுக்கு ஒன்றும்புரியவில்லை. பின்னர் ஆங்கிலேய கொடியை இறக்கி விட்டு நமது தேசியக் கொடியை கொடிக் கம்பத்தில்ஏற்றினர்.

இதற்கு மறுநாள் ஒரு தமிழ் பத்திரிக்கையில், முதல் பக்கத்தில் இரண்டு புகைப்படங்கள் இடம் பெற்றன. ஒருபடத்தில் நேரு தேசியக் கொடியை ஏற்றுவது போல இருந்தது. இன்னொரு படத்தில் இனக் கலவரத்தால்பாதிக்கப்பட்ட நவகாளி என்ற இடத்தில் காந்தி இருக்கும் படம் உள்ளது.

நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்ததில் மிகப் பெரும் பங்கு வகித்த காந்திதான் தேசியக் கொடியை ஏற்றிவைத்திருக்க வேண்டும். ஆனால், அவரோ, இனக் கலவரம் நடந்த இடத்திற்கு சென்று கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தார். அதுதான் உத்தமமான வாழ்க்கை. அப்போது நான் முடிவெடுத்தேன், காந்தி மாதிரி நாம் வாழவேண்டும் என்று.

சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றேன். அங்குள்ள ராபின் ஐலன்ட் தீவில் நெல்சன் மண்டேலா சிறைவைக்கப்பட்டிருந்த சிறைச்சாலைக்கு சென்று அங்கு மண்டேலா இருந்த அறையைப் பார்த்து வியந்தேன்.அவ்வளவு சின்ன அறை அது.

விடுதலையாகி வெளியே வந்த மண்டேலா அதிபராகவும் மாறினார். ஆனால் வெள்ளைக்காரர்களை அவர்பழிவாங்கவில்லை, நாட்டை விட்டு வெளியேற்றவில்லை. மாறாக அவர்களுக்கும் சம உரிமை தந்தார். இன்னாசெய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் என்ற வள்ளுவரின் வார்த்தைக்கு ஏற்ப மண்டேலாநடந்து கொண்டார் என்றார் கலாம்.

நிகழ்ச்சியில் மாணவர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த கலாம், சந்திரனை பற்றி ஆய்வு நடத்த வரும் 2007ல்ராக்கெட் விண்ணுக்கு அனுப்பப்படும் எனத் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் காஞ்சி சங்கராச்சாரியார், விஜயேந்திரர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X