For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிபிசிஐடி to

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மரம் மற்றும் ஆள் கடத்தல் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டும் அதை மேற்கொள்ளத் தவறிய தமிழகசி.பி.சி.ஐ.டி. போலீஸாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும் அந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்தும் உயர் நீதிமன்றம் உத்ததரவிட்டது.

ஏற்கனவே ஜாதிப் பாசம், ஊழலால் மரியாதை இழந்த தமிழக காவல்துறை, ஜெயலட்சுமி விவகாரத்தால்கெளரவத்தையும் இழந்து நிற்கிறது.

தமிழக காவல்துறையை நம்பி ஜெயலட்சுமி விவகாரத்தை விசாரணைக்கு விட மறுத்த சென்னை உயர் நீதிமன்றம்,அதை சிபிஐயிடம் ஒப்படைத்தது.

இந் நிலையில் தமிழக காவல்துறைக்கு மேலும் ஒரு களங்கமாக சிபிசிஐடி விசாரணையில் தூங்கிக் கொண்டிருந்தஒரு வழக்கை, சிபிஐ விசாரணைக்கு அதிரடியாக மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

அந்த வழக்கின் விவரம்:

சென்னை மாநிலக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வந்தவர் ராஜேந்திரன். இவர் சில மாதங்களுக்கு முன்சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அதில், மயிலாடுதுறையில் வனத்துறைக்குச் சொந்தமான தேக்கு மரங்களை சிலர் கடத்தி விற்பனை செய்து வந்ததுதொடர்பாக மயிலாடுதுறை கோட்டாட்சியர் கருணாகரனிடம் புகார் கொடுத்தேன். ஆனால் நடவடிக்கைஎடுப்பதற்குப் பதிலாக என்னை ஆட்களை வைத்துக் கடத்திய கருணாகரன், வழக்கை வாபஸ் பெறுமாறுமிரட்டினார்.

பின்னர் அவரிடமிருந்து மீண்டு வந்தேன். இதுதொடர்பாக உரிய விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்என்று மனுவில் கூறியிருந்தார்.

எஸ்பிசிஐடி to சிபிசிஐடி:

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், புகார் குறித்து ஸ்பெஷல் பிராஞ்ச் சிஐடி போலீஸ் (எஸ்.பி.சிஐடி)விசாரணைக்கு உத்தரவிட்டார்.

ஆனால் எஸ்.பி.சிஐடி பிரிவு கலைக்கப்பட்டு விட்டதாக காவல்துறைத் தரப்பில் நீதிமன்றத்திடம்தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஜூலை மாதம் சிபிசிஐடிக்கு இந்த வழக்கை மாற்றி நீதிமன்றம்உத்தரவிட்டது.

மீண்டும் மிரட்டப்பட்ட பேராசிரியர்:

இந்த நிலையில் பேராசிரியர் ராஜேந்திரன் உயர் நீதிமன்றத்தில் மற்றொரு மனுவைத் தாக்கல் செய்தார். அதில்சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தாமல் மெத்தனமாக உள்ளனர். மேலும், என்னை மிரட்டி வழக்கை வாபஸ்பெறுமாறு வற்புறுத்தி வருகின்றனர் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதி கற்பகவிநாயகத்திடம் விசாரணைக்கு வந்தது. மனுவை பரிசீலித்த நீதிபதிகற்பகவிநிாயகம், விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டு பல மாதமாகியும் சிபிசிஐடி போலீஸார் விசாரணைநடத்தாமல் மனுதாரரையே மிரட்டியிருப்பது துரதிர்ஷ்டவசமானது.

சிபிசிஐடி to சிபிஐ:

தமிழக காவல்துறை இந்த வழக்கில் பாரபட்சம் காட்டுவதால், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடுகிறேன். 3மாதங்களுக்குள் விசாரணையை முடித்து நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றுஉத்தரவிட்டார்.

ஓ.பி தம்பி விவகாரம்:

இதே போலவே கேரளாவுக்கு தேனி காட்டுப் பகுதியில் இருந்து தேக்கு மரங்களைக் கடத்தி விற்று வருவதாகஅமைச்சர் பன்னீர் செல்வத்தின் தம்பி ராஜா மீது புகார் கூறிய வனத்துறை அதிகாரி ராஜேந்திரன் மீது சாதி துவேசசட்டத்தின் கீழ் வழக்குப் போட்டு போலீஸ் அலைகழித்து வருவது குறிப்பிடத்தக்கது.

போலீசாருக்கும் ஓ.பி தரப்பினருக்கும் பயந்து, தலைமறைவாகி, ஓடி, ஒளிந்து, நீதிமன்றத்தில் சரணடைந்து,சிறைக்குப் போய், இப்போது நிபந்தனை ஜாமீனில் வெளியில் வந்துள்ள ராஜேந்திரன் இப்போது தனக்கும்குடும்பத்தினருக்கும் பாதுகாப்பில்லை என கண் கலங்கி நிற்பதும் குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X